விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம்
பாலிவுட்டில் பிரம்மாஸ்திரம் பார்ட் 1 சிவா, வாலே, பிளாக் அவுட் என பல படங்களில் நடித்தவர் மவுனி ராய். தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி, திரிஷா நடித்துள்ள விஸ்வாம்பரா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். கடந்த 2022ம் ஆண்டு சூரஜ் நம்பியார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மவுனிராய்.
இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் அவர்கள் இருவரும் பின் தொடர்வதை திடீரென்று நிறுத்தியுள்ளார்கள். இதையடுத்து அவர்கள் விவாகரத்து செய்யப்போவதாக பாலிவுட் ஊடகங்களில் ஒரு பரபரப்பு செய்தி பரவத் தொடங்கியுள்ளது.
அது குறித்து ஒரு பதிவு போட்டுள்ளார் மவுனி ராய். அதில், ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட வேண்டாம். எங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு சுதந்திரம் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதேசமயம், விவாகரத்து செய்திகளை அவர் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.