ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்'
ADDED : 2 hours ago
நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‛மா இண்டி பங்காரம்'. ஆக் ஷன் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சமந்தாவுடன் அஞ்சலி, சத்யராஜ், ஸ்ரீலட்சுமி, ஸ்ரீ முகி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படம் மே 15ம் தேதி ரிலீசாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன்பிறகு ஐபிஎல் விளையாட்டு போட்டிகள் காரணமாக மாற்றுத் தேதியில் படம் வெளியாகும் என்று கூறினார்கள். இந்த நிலையில் தற்போது மா இண்டி பங்காரம் படம் ஜூன் 19ம் தேதி திரைக்கு வருவதாக அறிவித்துள்ளார்கள். தெலுங்கில் ராம்சரண் நடித்துள்ள பெத்தி படம் ஜூன் நான்காம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதையடுத்து இரண்டு வாரங்களுக்கு பிறகு சமந்தாவின் படம் வெளியாகிறது.