தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி: சிவகார்த்திகேயன் எச்சரிக்கை
ADDED : 12 hours ago
முன்னணி நிறுவனங்களின் பெயரில் போலியான ஆடிசன்கள் நடத்தி மோசடி கும்பல்கள் பணம் பறிப்பது தொடர்ந்து வருகிறது. சமீப நாட்களாக சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன் பெயரில் அப்படியான மோசடிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியானது.
இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ''எங்கள் நிறுவனத்தின் திரைப்படங்களுக்கான நடிகர்களை இயக்குனர்களோ, ஒருங்கிணைப்பாளர்களோ, காஸ்டிங் ஏஜென்ட்களோ அல்லது வேறொரு நபர்களோ தேர்ந்தெடுப்பதில்லை. எஸ்கே புரொடக்ஷன்ஸ் வெளியிடும் எந்த ஒரு அறிவிப்புகள் மற்றும் தகவல்கள் தங்களது அதிகாரபூர்வ சமூக வலைதளத்தில் மட்டும் தான் வெளியிடப்படும். இது தொடர்பாக வாட்ஸ்அப் செய்திகள், மின்னஞ்சல்கள், அழைப்புகள் அல்லது சமூக வலைதளங்களை நம்ப வேண்டாம்” எனக் கூறப்பட்டுள்ளது.