தமிழில் மீண்டும் ஒரு ஜோம்பி படம்
சினிமாவில் ஜோம்பி கதைகள் என்ற ஒரு வகை இருக்கிறது. இதற்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஒரு வித வைரசால் பாதிக்கப்படுகிறவர்கள் ரத்தவெறி பிடித்து மற்றவர்களை கழுத்தில் கடிப்பார்கள். கடிபட்டவர்களும் ஜோம்பியாக மாறி விடுவார்கள்.
இந்த ஜார்னரில் தமிழில் 'பல்லு படாம பாத்துக்கணும்' என்ற படம் வெளிவந்தது. தற்போது சந்தானம் நடிக்கும் 'லவ் பைட்' படமும் அந்த வகையான படமாக தயாராகிறது. கதை நடக்கும் ஊரின் பெயர் 'கடியூர்'. ஜோம்பிகள் வாழும் இந்த ஊருக்கு திருடச் செல்லும் சந்தானம், ஆனந்தராஜ் அங்கு மாட்டிக் கொள்கிறார்கள். பின்பு அங்கிருந்து அவர்கள் தப்பிக்கிற சர்வைவல் காமெடி படமாக உருவாகிறது.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கிறார்கள். விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, முத்துக்குமார், ஆதித்யா கதிர் ஆகியோரும் நடிக்கின்றனர்.
'கான்ஜூரிங் கண்ணப்பன்' படத்தை இயக்கிய செல்வின் ராஜ் சேவியர் இயக்குகிறார். சுயாதீன இசையமைப்பாளர் பாக்ஸ்ன் எஸ். யுவா ஒளிப்பதிவு செய்கிறார்.