வாசகர்கள் கருத்துகள் (1)
அந்த படம் பார்க்கும் பணத்தை பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பயன் தரும் ஏதாவது பொருள் வாங்கி தரலாம்
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்த 'கருப்பு' படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. கடந்த ஆண்டே ரிலீஸ் ஆக வேண்டிய இந்த படம் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி, படத்தயாரிப்பாளர் ஏற்பட்ட மோதல் காரணமாக ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போய்க்கொண்டே வந்தது. கடைசியில் மே 14 என படக்குழு முடிவு செய்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக இந்த படத்துக்காக வேலை செய்து இருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. சிங்கம் 2 வெற்றிக்குபின் பெரிய வெற்றி கிடைக்காத நிலையில், சூர்யாவும் இந்த படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார். 'தக்லைப்' படத்தால் ஏற்பட்ட கெட்டபெயர் இந்த படத்தால் நீங்கும் என ஹீரோயின் திரிஷாவும் நினைக்கிறார். சாய் அபயங்கரும் தனக்கு இன்னொரு வெற்றி கிடைக்கும் என நம்புகிறார். கோடை விடுமுறையில் இந்த படம் வந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு புக்கிங் இல்லை என்று கூறப்படுகிறது. பல இடங்களில் புக்கிங் டல் ஆக இருக்கிறது.
மேலும் படத்தின் ரிலீசுக்கும் சில இடங்களில் சிக்கல், அது குறித்த பேச்சுவார்த்தை போய்கொண்டு இருக்கிறது. ஆனாலும், பட ரிலீசுக்கு பிரச்னை வராது. அனைத்தும் பேசி தீர்க்கப்பட்டுவிடும் என்று கூறப்படுகிறது. கார்த்தி நடித்த 'ஜப்பான்' படத்தை தயாரித்த நிறுவனம் இந்த படத்தையும் தயாரிக்கிறது. ஜப்பான் படத்தால் பல கோடி இழப்பு ஏற்பட்டதால் கருப்பு படத்துக்கு பிஸினஸ் ரீதியாக சில தடைகள் வந்ததாகவும், சில இடங்களில் வியாபார பகிர்வுமுறையில் சிக்கல் என்றும் கூறப்பட்டது.
ஆனால், தமிழகத்தில் படம் குறித்த விளம்பரம் குறைவாக இருப்பதாலும், படக்குழுவினர் தமிழகத்தில் கருப்பு குறித்து அதிகம் பேசாமல் இருப்பதாலும் புக்கிங் குறைவாக இருக்கிறது. நாளை படத்தின் ரிசல்ட் பொறுத்து புக்கிங் நிலவரம் மாறும் என்று கோலிவுட் வட்டாரங்கள் சொல்கின்றன.
அந்த படம் பார்க்கும் பணத்தை பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பயன் தரும் ஏதாவது பொருள் வாங்கி தரலாம்