'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'. மமிதா பைஜு நாயகியாக நடித்துள்ள இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படம் ஜூலை மாதம் வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் தற்போது அப்படத்தை சுதந்திர தினத்தில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே சூர்யா நடித்துள்ள 'கருப்பு' படம் இம்மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளதால் உடனடியாக அடுத்த படத்தை வெளியிட வேண்டாம் என்பதற்காக ரிலீஸ் தேதியை மாற்ற திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், 40 வயது துப்பாக்கிச்சூடு வீரரை காதலிக்கும் 20 வயது பெண்ணை பற்றிய கதையில் இந்த படம் உருவாகிறது. இப்படத்தில் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.