உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல்

'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல்


ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'திரிஷ்யம்' படத்தின் முதல் இரண்டு பாகங்களும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது மூன்றாவது பாகமும் உருவாகி இருக்கிறது. நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியானதை தொடர்ந்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. மே 21ம் தேதி இந்த குற்றப்புலனாய்வு திரில்லர் படமான 'திரிஷ்யம்-3' தியேட்டருக்கு வருகிறது.

இப்படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில் மோகன்லால் பேசும்போது, ''திரிஷ்யம் -3 பெரிய அளவில் வெற்றி பெற்றால் திரிஷ்யம்-4 மற்றும் திரிஷ்யம்-5 படங்களை தயாரிக்க படக்குழு தயாராக உள்ளார்கள். அதோடு, திரிஷ்யம் நான்காவது பாகத்திற்கு முன்பே ஐந்தாவது பாகம் உருவாக்கப்படும்'' என்றும் பேசியுள்ள மோகன்லால், ''திரிஷ்யம்- 3 படத்தின் கிளைமேக்ஸ் முந்தைய பாகங்களைப் போல் அல்லாமல் முற்றிலும் தனித்துவமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது'' என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த படத்தில் மோகன் லாலுடன் மீனா, எஸ்தர் அணில், அன்சிபா ஹாசன், ஆஷா சரத், சித்திக் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். அனில் ஜான்சன் இசையமைத்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !