'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல்
பாலிவுட்டில் கடந்த 2023ல் வெளியான 'கடார் 2' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சன்னி தியோல், அமிஷா பட்டேல் நடித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து 'கடார் 3' திரைப்படம் உருவாகுமா? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது. இந்த நிலையில் 'கடார் 2' படத்தின் நாயகியான அமிஷா பட்டேல் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது, கடார் மூன்றாம் பாகம் நிச்சயம் உருவாகும் என்று கூறியுள்ளார்.
“இதற்கான திரைக்கதை மற்றும் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடார் போன்ற ஒரு மிகப்பெரிய பிராண்டிற்கு 500 கோடி என்பது மிகக் குறைந்த வசூல் இலக்குதான். இந்த மூன்றாம் பாகம் வெளியாகும்போது தியேட்டர்களில் மிகப்பெரிய கொண்டாட்டம் இருக்கும். முந்தைய இரண்டு பாகங்களை விட மூன்றாம் பாகம் இன்னும் மிகப்பெரிய அளவிலும் விறுவிறுப்பான கதையுடனும் இருக்கும் என்று சில தகவல்களைக் கூறியுள்ளார்.