உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி

பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி

ராம் சரண் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் பெத்தி. புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள இதில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் சிவராஜ் குமார், ஜெகபதி பாபு, பொம்மன் இரானி ஆகியோர் நடித்துள்ளனர். வரும் ஜூன் நான்காம் தேதி இப்படம் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே படப்பிடிப்பு மற்றும் விஎப்எக்ஸ் பணிகள் காரணமாக ரிலீஸ் தேதி தாமதமான நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கடைசி கட்ட படப்பிடிப்பாக ஆறு நாட்கள் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

அந்த சமயத்தில் படப்பிடிப்பின் கடைசி நாளன்று நடிகர் சிரஞ்சீவியும், புஷ்பா பட இயக்குனர் சுகுமாரும் சேர்ந்து பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்து படக்குழுவினருக்கு சர்ப்ரைஸ் அளித்துள்ளனர். அப்போது நடிகர் சிரஞ்சீவி, இயக்குனர் புச்சி பாபு சனாவிடம் எனக்காக ராம்சரண் சைக்கிள் ஓட்டுவது போல ஒரு காட்சியை படமாக்குங்கள் என்று ஜாலியாக ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார்.

இயக்குனர் புச்சி பாபு சனா, சுகுமாரின் சீடர் என்பதும், இந்த படத்தில் ஆரம்பம் முதல் கதை விவாதம் வரை சுகுமாரின் பங்களிப்பும் இதில் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !