தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு படம் மே 14ம் தேதி திரைக்கு வருகிறது. கிராமத்து கதையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் இருப்பது போன்று தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக முன்பு தமிழ் சினிமாவைப் போலவே தெலுங்கிலும் சூர்யாவுக்கு மிகப்பெரிய மார்க்கெட் இருந்தது. ஆனால் அவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக தெலுங்கில் தோல்வி அடைந்து வந்த நிலையில் கங்குவா படம் அவரது மார்க்கெட்டை சுத்தமாக காலி பண்ணி விட்டது.
இந்த நிலையில்தான் தற்போது திரைக்கு வரவுள்ள கருப்பு படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இந்த படத்துக்கு போட்டியாக தமிழில் எப்படி பெரிய படங்கள் எதுவும் திரைக்கு வரவில்லையோ, அதேபோன்றுதான் தெலுங்கிலும் வீரபத்ருடு என்ற பெயரில் வெளியாகும் கருப்பு படத்தின் ரிலீசின்போது எந்த பெரிய படமும் வெளியாகவில்லை. ராம் சரண் நடித்துள்ள பெத்தி படம் கூட அதன்பிறகு 20 நாட்களுக்கு பிறகுதான் திரைக்கு வருகிறது. அதனால் சூர்யாவின் இந்த கருப்பு படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வசூல் சாதனை செய்யும் என்று அப்படக்குழுவில் எதிர்பார்க்கிறார்கள்.