மலையாளத்தில் அறிமுகமாகும் இர்பான் கான் மகன்
ஹிந்தியில் பிரபல குணச்சித்திர நடிகராக ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் இர்பான் கான். கடந்த 2020ல் கொரோனா முதல் அலையின் போது உடல்நலம் பாதிக்கப்பட்டு இவர் மரணமடைந்தது பாலிவுட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. இந்த நிலையில் அவரது மகன் பாபில் கான் ஹிந்தியில் ஒரு சில படங்களில் கதாநாயகனாக மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது முதன்முறையாக மலையாளத்தில் உருவாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் பாபில் கான்.
பிரபல மலையாள இயக்குனர் பாபு ஜனார்த்தனன் இந்த படத்தை இயக்குகிறார். பாபில் கானுக்கு ஜோடியாக நடிகை அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். கேரளாவில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகிறது. இதில் பாபில் கான் மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞராக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மே மாதம் இறுதியில் மேற்கு வங்கத்தில் தொடங்க இருக்கிறது..