மீண்டும் சினிமாவில் நடிப்பார் விஜய்… அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி
தமிழக சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீண்டும் சினிமாவில் நடிப்பார் என தேர்தலுக்கு முன்பு வதந்திகள் பரவி இருந்தன. அவர் அட்லீயிடம் கதை கேட்கிறார், லோகேஷ் கனகராஜிடம் கதை கேட்கிறார் என்றெல்லாம் பேசினார்கள்.
அவை அனைத்திற்கும் தற்போது நிரந்தர முற்றுப்புள்ளி ஏற்பட்டுவிடும். தமிழக முதல்வராக ஓரிரு நாட்களில் விஜய் பதவியேற்க உள்ளார் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. தமிழக முதல்வர் ஆகிவிட்டால் அவர் நிச்சயம் படங்களில் நடிக்க மாட்டார்.
ஆந்திரத்தில் கூட நடிகராக இருந்து துணை முதல்வரான பவன் கல்யாண் தற்போதும் படங்களில் நடித்து வருகிறார். ஆனால், விஜய் அப்படி நடிக்க மாட்டார் என்பதை இப்போதே சொல்லலாம். சினிமாவில் உச்ச பட்ச வெற்றியைப் பார்த்தவர் அவர்.
தமிழக அரசியலில் இரண்டு திராவிட கட்சிகளையும் வீழ்த்தி அரசியலில் ஆரம்பத்திலேயே உச்சபட்ச வெற்றியைப் பார்த்துள்ளார். அதனால், அவரது பயணம் இனி அரசியலில் மட்டுமே தொடரும் என்பது உறுதி.