உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடுத்த ஜேம்ஸ்பாண்ட் ராபர்ட் பேட்டின்சன் : வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அடுத்த ஜேம்ஸ்பாண்ட் ராபர்ட் பேட்டின்சன் : வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வாஷிங்டன்:பிரபல நடிகர் டேனியல் கிரேக் தொடர்ந்து 5 ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்தார். கடைசியாக 2021ம் ஆண்டு ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் 25வதுபடமான ' நோ டைம் டுடை' வெளியானது.
இனி ஜேம்ஸ்பாண்ட் வேடங்களில் நடிக்கப் போவதில்லை என டேனியல் கிரேக் அறிவித்தார். அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார் என்ற கேள்வி உலகளவில் உள்ள ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அதற்கான தேடுதல் முயற்சிகள் நடந்தன.
இந்நிலையில் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் பிரபல நடிகர் ராபர்ட் பேட்டின்சன் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேட்மேன் படத்திலும் மற்றும் கிறிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில் வெளியான தி ஒடிசி படத்திலும் நடித்துள்ளார். 2028 ல் வெளியாக உள்ள தி பேட்மேன் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.
புதிய ஜேம்ஸ்பாண்ட் ஆக ராபர்ட் பேட்டின்சனின் புகைப்படமும் வெளியாகிஉள்ளது. அடுத்த ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தை டெனிஸ் வில்லெனுவ் இயக்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !