'பெத்தி' படத்தின் ரிலீஸ் தேதியில் புதிய மாற்றம்!
ADDED : 9 hours ago
'உப்பேனா' பட இயக்குனர் புஞ்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடித்து வரும் படம் 'பெத்தி'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர். இந்த படம் ஜூன் மாதத்தில் 25ம் தேதியன்று திரைக்கு வருகிறது என இதன் இயக்குனர் புஞ்சி பாபு சனா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அறிவித்தார்.
ஆனால், இதன் பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு பெரிய ட்விஸ்ட் ஆக யஷ் நடித்துள்ள பான் இந்திய படமான 'டாக்சிக்' படம் ஜூன் 4ம் தேதியில் இருந்து தள்ளிப்போகிறது என அறிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து பெத்தி பட தயாரிப்பு தரப்பில் இருந்து விநியோகஸ்தர்களுக்கு பெத்தி படம் ஜூன் 4ம் தேதியன்று திரைக்கு வருகிறது என தகவல் அனுப்பி வைத்துள்ளனர்.