மே 6ல் ஓடிடியில் வெளியாகும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் ஏப்ரல் 10ம் தேதி வெளியான படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'.
இரண்டு முறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டு பின்னர் வெளியானது. பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்த முந்தைய மூன்று படங்களான 'லவ் டுடே, டிராகன், டியூட்' ஆகிய படங்கள் 100 கோடி வசூலித்தது. அது போல 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படமும் வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. மொத்தமாக சுமார் 70 கோடி வரை மட்டுமே இந்தப் படம் வசூலித்துள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி வெளியீட்டை அமேசான் பிரைம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மே 6ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்கள். தியேட்டர்களில் சுமாரான வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ஓடிடியில் எப்படி வரவேற்பைப் பெறும் என்பதைப் பார்க்க ஐந்து நாட்கள் காத்திருக்க வேண்டும்.