உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஊட்டியில் துவங்கிய அஜய் தேவ்கனின் 'கோல்மால் 5' படப்பிடிப்பு

ஊட்டியில் துவங்கிய அஜய் தேவ்கனின் 'கோல்மால் 5' படப்பிடிப்பு


சமீப காலமாக பாலிவுட் ஹீரோக்கள் சிலர் இந்த சம்மரில் வெயிலை சமாளிக்க, தங்களது படப்பிடிப்பை தென்னிந்தியாவில் அதுவும் குறிப்பாக கேரளா, ஊட்டி போன்ற பகுதிகளில் நடத்தும்படி இயக்குனர்களிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன்படி சமீபத்தில் அக்ஷய் குமார் மற்றும் வித்யா பாலன் ஆகியோர் அனீஸ் பாஸ்மி இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக தனி விமானத்தில் கேரளா வந்து இறங்கினார்கள். அதற்கு சில மாதங்களுக்கு முன்பு கூட அக்ஷய் குமார், அஜய் தேவகன் இணைந்து நடித்த 'ஹைவான்' படத்தின் படப்பிடிப்பும் பெருமளவு கேரளாவில் தான் நடைபெற்றது.

இந்த நிலையில் நடிகர் அஜய் தேவ்கன் ஏற்கனவே நடித்து நான்கு பாகங்களாக உருவாகி வெற்றி பெற்ற கோல்மால் படத்தின் ஐந்தாவது பாகத்தில் நடிக்கிறார். அவரது ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான ரோஹித் ஷெட்டி தான் இந்த படத்தை இயக்குகிறார். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் துவங்கி உள்ளது. ஒரு வித்தியாசமான கார் அளவுக்கு நீளம் கொண்ட பைக் ஒன்றும் இதில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. இது குறித்து ஊட்டி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் அஜய் தேவ்கன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !