உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சசியின் நூறு சாமி ரிலீஸ் தள்ளிப்போகுதா

சசியின் நூறு சாமி ரிலீஸ் தள்ளிப்போகுதா

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா நடித்த நூறு சாமி படம் மே 1ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இவர்கள் கூட்டணியில் வெளியான பிச்சைக்காரன் படம் தமிழ், தெலுங்கில் பெரிய ஹிட் ஆகி இருந்ததால் நூறு சாமி படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் பாடல் வெளியீட்டு விழா உள்ளிட்ட விளம்பர பணிகள் தொடங்கப்படவில்லை. படம் குறித்த அப்டேட் வரவில்லை. இதனால் பட ரிலீஸ் தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது.

ஏப்ரல் 30ம் தேதி தனுஷ் நடித்த கர படம், தமிழ், தெலுங்கில் வர உள்ளது. மே 14ம் தேதி சூர்யா நடித்த கருப்பு வர உள்ளது. இதனால் நூறுசாமி படத்துக்கு தியேட்டர்கள் அதிகம் கிடைக்காத நிலை. பிச்சைகாரன் மாதிரி இந்த படத்தையும் வெற்றி பெற வைக்க வேண்டும் என படக்குழு நினைப்பதால் பட ரிலீஸ் தள்ளிபோகும் என கூறப்படுகிறது. ஒரு உண்மை சம்பவம் அடிப்படையில் இந்த கதையை சசி எடுத்துள்ளார்.கரும்பு விவசாயி ஆக விஜய் ஆண்டனி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !