'மக்கள் காவலன்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு
ADDED : 1 hours ago
சந்தோஷ் குமார் இயக்கத்தில் மணிகண்டன் போலீஸ் வேடத்தில் நடித்துள்ள படம் ‛மக்கள் காவலன்'. திவ்யா ஸ்ரீபாதா நாயகியாக நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே 'இக்னோர்' எனும் முதல் பாடல் வெளியானது.
இப்போது 'இற இறகாக..' எனும் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது. ஜோதி கண்ணா பாடல் வரிகளை எழுத நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்து, பாடியுள்ளார். இந்தப் பாடல், நாயகன் தனது கடினமான உலகத்திலிருந்து விடுபட்டு, காதலியின் அன்பின் மூலம் காதலின் மீதான நம்பிக்கையை எவ்வாறு பெறுகிறான் என்பதை சித்தரிக்கிறது.
காவல் துறையைச் சார்ந்த ஒரு மனிதன் கண்ணியத்துடன் வாழ விரும்புகிறான். ஆனால் ஊழல் நிறைந்த அமைப்பு அவனை சூழும்போது அவன் எடுக்கும் முடிவு, அதனால் ஏற்படும் பாதிப்பு தான் படத்தின் ஒன்லைன். வருகிற டிசம்பர் 4ம் தேதி படம் ரிலீஸாகிறது.