உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகா அவதார் பரசுராம் : பின்னணி இசைகேற்ப உருவாகும் படம்

மகா அவதார் பரசுராம் : பின்னணி இசைகேற்ப உருவாகும் படம்

கடந்த 2024ம் ஆண்டு வெளியான அனிமேஷன் படம் 'மகா அவதார் நரசிம்மா'. அஸ்வின் குமார் இயக்கி இருந்தார். இந்தப் படம் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. தற்போது இதன் இரண்டாம் பாகம் 'மகா அவதார் பரசுராம்' என்ற டைட்டிலுடன் உருவாகிறது. இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

பொதுவாக ஒரு படம் முடிந்த பிறகு அந்த படத்தை பார்த்துதான் பின்னணி இசை அமைப்பார்கள். அரிதாக இளையராஜா இசை அமைத்த சில படங்களில் காட்சிகளுக்கு முன்னரே இளையராஜா பின்னணி இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார். ஒரு முழு படமும் பின்னணி இசை அமைக்கப்பட்டு பின்னர் படமாவது மிகவும் அரிதானது.

அந்த வகையில் 'மகா அவதார் பரசுராம்' படத்தின்று சாம் சி.எஸ்.பின்னணி இசை அமைத்து முடித்து விட்டார். பின்னணி இசைக்கு ஏற்றபடி படத்தின் காட்சிகள் தற்போது அனிமேஷனில் உருவாக்கப்பட்டு வருகிறது. பல்வேறு வெளிநாட்டு இசைக் கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என 250 பேர் இணைந்து சாம் சி.எஸ். தலைமையில் இந்த பணியை செய்திருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !