உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 8 வார ஓடிடி ரிலீஸ்: பிரச்னை ஆரம்பம்

8 வார ஓடிடி ரிலீஸ்: பிரச்னை ஆரம்பம்


தென்னிந்திய மொழிகளில் தியேட்டர்களில் வெளியாகும் புதிய படங்கள் 4 வார ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. அதை 8 வாரங்கள் என மாற்ற வேண்டும் என சமீபத்தில் வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் சங்கத்தின் தென்னிந்திய கூட்டுக் கூட்டத்தில் முடிவு செய்தார்கள். ஆனால், அது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இதுவரையில் எதுவும் தெரிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் 8 வார ஓடிடி வெளியீடு என்பது குறித்து மே 10ல்தான் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதற்குள்ளாக 8 வாரங்களுக்குப் பிறகு தான் ஓடிடி ரிலீஸ் என கடிதம் தரும்படி தயாரிப்பாளர்களை நிர்பந்திக்கக் கூடாது என அதில் குறிப்பிட்டுள்ளார்கள்.

தற்போது தென்னிந்திய அளவில் தயாரிப்பாளர் சங்கம் இணைந்து ஒரு கூட்டுக் குழுவை ஆரம்பித்துள்ளார்கள். அதில் ஓடிடி உள்ளிட்ட சில முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. மே 10ம் தேதி நடக்க உள்ள பேச்சுவார்த்தைக்குப் பிறகே அனைத்தும் முடிவாகும் எனத் தெரிகிறது.

தென்னிந்திய அளவில் இப்படி தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்தால் தியேட்டர்காரர்களின் பல நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க முடியும் என சீனியர் தமிழ் தயாரிப்பாளர் தெரிவிக்கிறார். இதுவரையில் தென்னிந்திய மொழி தயாரிப்பாளர் சங்கங்கள் தனித்தனியாகவே செயல்பட்டு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !