உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்து கடவுள் பற்றி அவதூறு: 100 கோடி நஷ்டஈடு கேட்டு பிரகாஷ்ராஜ் மீது வழக்கு

இந்து கடவுள் பற்றி அவதூறு: 100 கோடி நஷ்டஈடு கேட்டு பிரகாஷ்ராஜ் மீது வழக்கு


நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து கடவுள்களை அவதூறாக பேசியிருந்தார். “ராமரும், லட்சுமணரும் வடநாட்டில் இருந்து தென்னாட்டை ஆக்கிரமிக்க வந்தவர்கள்” என்கிற பொருள்பட அவர் பேசி இருந்தார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துத் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. திருப்பதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் செய்யப்பட்டது.

இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி, நடிகர் பிரகாஷ் ராஜ் இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காக இந்துக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கட் வேண்டும் என்று கூறியிருந்தார்.

தற்போது ராமர், லட்சுமணர் குறித்து அவதூறாக பேசிய பிரகாஷ் ராஜிடம் 100 கோடி நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ள பிரகாஷ் ராஜ் வீட்டுக்கு அவதூறு நோட்டீட்ஸ் அனுப்பப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Arumugam Elangovan, Chennai
2026-04-21 15:03:19

பானு பிரகாஷ் ரெட்டிக்கும் ராமர், லட்சுமணருக்கும் என்ன உறவு? அவர் எந்த வகையில் இந்தக் கடவுள்களுக்கு உரிமை உடையவர்? வாரிசு சான்றிதழ் வைத்துள்ளாரா? உரிமை இவர் மட்டுமா? பிற இந்துக்களுமா? இழப்பீடு வாங்கி யார் யாருக்கு எப்படிப் பகிர்ந்தளிப்பார்? எத்தனை பேருக்குப் பகிர்ந்தளிப்பார்?