உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 1 கோடி இழப்பீடு கேட்டு தமன்னா தொடர்ந்த வழக்கு மீண்டும் தள்ளுபடி

1 கோடி இழப்பீடு கேட்டு தமன்னா தொடர்ந்த வழக்கு மீண்டும் தள்ளுபடி


கடந்த 2008ம் ஆண்டு சோப் நிறுவனத்தின் ஒரு விளம்பரத்தில் நடித்திருந்தார் நடிகை தமன்னா. ஆனால் அந்த விளம்பரத்தின் ஓராண்டு ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் தமன்னாவின் புகைப்படங்களை அந்த நிறுவனம் தங்களது சோப்பிற்கு பயன்படுத்தி வந்துள்ளது. இதனால் ஒப்பந்தத்தை மீறி தனது புகைப்படங்களை பயன்படுத்தியதற்காக அந்த நிறுவனத்திடம் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு, கடந்த 2011ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தார் தமன்னா. அப்போது அதை விசாரித்த தனி நீதிபதி, அவர் சொன்ன ஆதாரங்கள் நம்பகத்தன்மை அற்றவை என்று சொல்லி 2017ம் ஆண்டில் வந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டார்.

ஆனால் அந்த உத்தரவை எதிர்த்து தமன்னா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வேல்முருகன், கோவிந்தராஜன், திலகவதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் ஏற்கனவே தீர்ப்பளித்த தனி நீதிபதியின் உத்தரவில் தாங்கள் தலையிட விரும்பவில்லை என்று சொல்லி இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !