'அரசன்' பார்த்து அதிர்ச்சி அடைந்த தனுஷ்
வெற்றிமாறன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிலம்பரசன், விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'அரசன்'. கடந்த வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்து ஒரு பஞ்சாயத்து நடைபெற்றது. தன்னிடமிருந்து வாங்கிய முன் பணத்தை சிலம்பரசன் திருப்பித் தர வேண்டும் என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பஞ்சாயத்து கூட்டியிருந்தார். அதனால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்தார்கள். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி பஞ்சாயத்தை முடித்து வைத்துள்ளார்கள்.
அதனால் கிடைத்த இடைவெளியில் தனுஷை சந்தித்திருக்கிறார் வெற்றிமாறன். அப்போது 'அரசன்' படத்தின் காட்சிகள் சிலவற்றை அவருக்குக் காட்டியிருக்கிறார். அதைப் பார்த்த தனுஷ் அதிர்ச்சியடைந்தாராம். அவை சிறப்பாக இருப்பதாகவும், சிலம்பரசன் வித்தியாசமாக, நுணுக்கமாக நடித்திருப்பதாகவும் பாராட்டியிருக்கிறார். அவரது பாராட்டால் உற்சாகமடைந்த வெற்றிமாறன், அதே உத்வேகத்துடன் அடுத்த வாரம் முதல் படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பிக்க உள்ளாராம்.