உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பைக் ரைடிங் : மஞ்சு வாரியருக்கு அஜித் தந்த அட்வைஸ்

பைக் ரைடிங் : மஞ்சு வாரியருக்கு அஜித் தந்த அட்வைஸ்

தனுஷ் நடித்த அசுரன் படத்தில் தமிழுக்கு வந்த மலையாள நடிகை மஞ்சுவாரியர், அதன்பிறகு வலிமை, வேட்டையன், விடுதலை 2 படங்களில் நடித்தார். தற்போது ஆர்யா நடித்துள்ள மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் ஏப்ரல் 17ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் மஞ்சுவாரியர் அளித்துள்ள ஒரு பேட்டியில், அஜித் குமாருடன் தான் பைக் ரைடிங் சென்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில், ‛‛அஜித்குமார் உடன் 14 நாட்கள் லடாக்கில் பயணித்தேன். அது ஒரு மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. அப்போது எனக்கு பைக் ஓட்ட தெரியும் என்றாலும் கூட என்னிடத்தில் ஓட்டுநர் உரிமம் இல்லை. அந்த பைக் ரைடிங்கிற்க்கு பிறகுதான் ஓட்டுனர் உரிமை வாங்கினேன் என்று கூறியுள்ள மஞ்சு வாரியார், அந்த பயணத்தின் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டால் நம்மை எப்படி நாம் காப்பாற்றிக் கொள்வது என்பது குறித்து சில முக்கிய ஆலோசனைகளை எனக்கு கொடுத்தார் அஜித். அந்த ஆலோசனை எப்போதும் எனக்கு பயனுள்ளதாக இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !