உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிறை பின்னணியில் உருவாகும் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு

சிறை பின்னணியில் உருவாகும் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வெற்றி, பிரிகிடா, பருத்திவீரன் சரவணன் உள்ளிட்டோர் நடித்த லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படத்தின் அறிமுக காட்சிகள் அடங்கிய டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

இந்த படத்திடன் படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணிப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நடிகர்கள் அறிமுகம் நடந்துள்ளளது. 1 நிமிடம் 27 விநாடிகள் ஓடும் இந்தக் காட்சிப்பதிவு, சிறைக் கம்பிகளின் பின்னால் அமைக்கப்பட்டுள்ள படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் வலுவான, உணர்ச்சி மிகுந்த காட்சிகளை வெளிப்படுத்துவதாக உள்ளது.

தர்புகா சிவா இசையமைத்துள்ளார். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விரிவாகப் படமாக்கப்பட்ட இந்தத் படத்தை, இயக்குனர் தயாள் பத்மநாபனும் சிலருடன் இணைந்து தயாரித்துள்ளார். பழம்பெரும் நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன், தியாகராஜ பாகவதர் சம்பந்தப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கு சம்பவத்துக்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதா? இது வேறு கதையாக என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது. வரலட்சுமி நடித்த கொன்றால் பாவம், மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் பல கன்னட படங்களை இயக்கியவர் தயாள் பத்மநாபன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !