உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சல்மான்கான் மீதான வாரண்ட்டை நிறுத்திவைத்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்

சல்மான்கான் மீதான வாரண்ட்டை நிறுத்திவைத்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்

பாலிவுட் நடிகர் சல்மான்கான் பல விளம்பர படங்களில் நடித்து வருகிறார். பல நிறுவனங்களின் விளம்பர தூதராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். அந்த வகையில் அவர் பான் மசாலா என்கிற நிறுவனத்தின் தூதராக இருந்து கொண்டு அவர் நடிக்கும் பான் மசாலா விளம்பரங்களின் மூலமாக மக்களை தவறாக வழி நடத்துவதாக கூறி ஜெய்ப்பூரை சேர்ந்த யோகேந்திர சிங் படியால் என்பவர் ஜெய்ப்பூர் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து பான் மசாலா நிறுவனம் மற்றும் சல்மான்கான் இவருக்கும் நேரில் ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியது. ஆனால் இந்த விஷயத்தில் நுகர்வோர் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் டில்லியை சேர்ந்த மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் தான் இது குறித்து தங்களிடம் கேள்வி எழுப்ப முடியும் என்றும் பதிலளித்தனர். இருப்பினும் வரும் ஏப்ரல் 13ம் தேதி சல்மான்கானுக்கு நுகர்வோர் ஆணையத்தில் ஆஜராகும்படி கடைசி சம்மனும் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இது குறித்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் சல்மான் கான் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர் நுகர்வோர் ஆணையத்தின் விசாரணைக்கு ஆஜராக தேவையில்லை என்று உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !