உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பைசன் படத்தை அடுத்து புதுமுக இயக்குனர் படத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்

பைசன் படத்தை அடுத்து புதுமுக இயக்குனர் படத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து கடந்த ஆண்டு அக்டோபர் 17ம் தேதி திரைக்கு வந்த படம் பைசன். இப்படத்தில் கபடி விளையாட்டு வீரராக நடித்திருந்தார் துருவ் விக்ரம். 30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 75 கோடி வசூலித்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் துருவ் விக்ரம் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை.

பைசன் படம் திரைக்கு வந்து ஆறு மாதங்களுக்கு பிறகு தற்போது புதுமுக இயக்குனர் கரண் அரவிந்த் குமார் என்பவர் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார் துருவ் விக்ரம். இந்த கரண் அரவிந்த் குமார் ஏற்கனவே துருவ் விக்ரம் நடித்த ஆதித்யா வர்மா என்ற படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியவர். அதோடு தற்போது சூர்யா நடித்திருக்கும் கருப்பு படத்தில் ரைட்டர் ஆகவும் உள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !