நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிறரை பற்றி குறை சொன்னாலும், கேட்டாலும் பலர் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால் அதே நேரம் மற்றவர் நம்மை குறை சொன்னால் போதும். உடனே முகம் சுருங்கி விடும். குறையை ஒருவரின் முகத்துக்கு எதிரே குத்திக் காட்டுதல் தீய பண்பு. அதைப் போல் ஒருவரது குறையை அவர் இல்லாத இடத்தில் மற்றவரிடம் சொல்வது புறம் பேசுவதாகும். இது பிரிவினையை ஏற்படுத்தும். நண்பர்களும் கூட இதனால் பிரிய நேரிடும்.