
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கல்விக்கும் அழிவில்லை. அதற்காக செலவிடும் பணத்திற்கு அழிவில்லை. அனைவரும் கல்வி கற்பது அவசியம்.
* தொட்டிலில் இருந்து மண்ணறை செல்லும் வரை கல்வியைத் தேடிக் கொள்.
* அறியாமையும், வறுமையும் ஒவ்வொரு குறைகளையும் வெளிப்படுத்தும்.
* அறிவும், பொருளும் ஒவ்வொரு குறைகளையும் மறைக்கும்.
* கல்வியோடு, கண்ணியத்தையும் கற்றுக் கொள்.
* பெற்றோரிடம் கண்ணியத்துடன் நடப்பது குழந்தைகளின் கடமை.
* குழந்தைகளை சமமாக நினைப்பது பெற்றோரின் கடமை.
* ஒருவர் எதை சம்பாதிக்கிறாரோ அதற்கு அவரே பொறுப்பாளர். அதில் வரும் பாவத்தை பிறர் சுமக்க மாட்டார்கள்.
* உங்களிடம் உள்ள செல்வங்களை இறைவன் பார்ப்பதில்லை. மாறாக உங்களின் செயல்களை மட்டுமே பார்க்கிறான்.
* எவர் மென்மையை இழந்துவிடுகிறாரோ அவர் நன்மைகள் அனைத்தையும் இழந்து விடுகிறார்.
* தவறு செய்பவர்களை மன்னியுங்கள்.
-பொன்மொழிகள்