
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு ஒப்பாகும்.
* இறைவன் தன் அடியாருக்கு தெளிவான வசனங்களை சொல்கிறான். உங்களை இருளில் இருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக.
* பணக்காரராக மாற வேண்டும் என பேராசைப்படாதீர்கள். மீறினால் நேர்மையை இழந்துவிடுவீர்கள்.
* எவர் பரிந்துரையுமின்றி அவனை நேராக நெருங்க முடியும். அவனிடம் உதவிகோர முடியும்.
* மனதில் நினைக்கும் செயல்கள் பிறர் அறிவதை நீங்கள் விரும்பவில்லையெனில் அது பாவச் செயல்.
* பிறரை தண்டிக்கும் சக்தி பெற்றிருந்தும் மன்னிப்பவரே உயர்ந்த மனிதர்.
* அநாதைகளுடைய உடைமை பொருட்களை அவர்களிடமே திருப்பி கொடுத்துவிடுங்கள்.