மூன்று மனிதர்கள் காட்டு வழியே நடந்து சென்றனர். வழியில் சூறைக் காற்றுடன் மழை பெய்யவே குகை ஒன்றுக்குள் நுழைந்தனர். காற்றின் வேகத்தால் பெரிய பாறை உருண்டு வந்து குகையின் வாசலை அடைத்தது. பிரார்த்தனையில் ஈடுபட்டால் இறையருளால் நல்லது நடக்கும் என அவர்கள் நம்பினர்.
முதலாம் நபர், 'தினமும் பகலில் ஆடு மேய்க்க செல்வேன். மாலையில் வீடு திரும்பியதும் ஆட்டுப்பாலை என் வயதான பெற்றோருக்கு கொடுப்பேன். பின்னர் குழந்தைகள், மனைவிக்கு கொடுப்பேன். ஒருநாள் பணியை முடித்து விட்டு வீட்டுக்கு தாமதமாக வந்த போது பெற்றோர் துாங்கி விட்டனர். அவர்களை எழுப்புவதற்கு மனம் இல்லாமல் விழிக்கும் வரை காத்திருந்தேன். இறைவா... நான் உன் திருப்திக்காகவே இதைச் செய்தேன். இது உண்மையானால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் குகையின் வாசலில் இடைவெளியை உண்டாக்கு' என பிரார்த்தித்தார். உடனே பாறையும் உருண்டதால் இடைவெளி ஏற்பட்டது.
பெற்றோருக்கு செய்யும் பணிவிடை இறையருளை பெற்றுத் தரும்.