நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* குறைவாக இருந்தாலும் தொடர்ந்து செய்யும் நல்ல செயல்களே இறைவனுக்கு பிரியமானது.
* தந்தையுடன் பிறந்தவர், தாயுடன் பிறந்தவர் இருவரும் தாய், தந்தைக்கு நிகரானவர்கள்.
* வட்டி என்ன தான் வருமானத்தை பெருக்கினாலும், அதன் முடிவு குறைந்து போகக் கூடியதே. வட்டி வாங்கி அதை உண்பவன், அதன் கணக்கை எழுதுபவன், அதன் சாட்சியாளன் அனைவரும் பாவம் செய்தவர்கள்.
* வாங்கிய கடனைத் திருப்பி தருவதில் முந்திக் கொள்ளுங்கள்.
* பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்வதில் விரைந்து கொள்ளுங்கள்.
* வயதும், காலமும் வீணாகும் முன் நல்ல செயல்களை செய்யுங்கள்.
* உங்களுக்கிடையே ஏற்படும் சண்டைகளை சமாதானம் மூலம் தீருங்கள்.