
கொடுங்கோல் மன்னர் நம்ரூத் ஆட்சியில் புதுமைக்கு பஞ்சமில்லை. அவற்றில் சில.
* ஒவ்வொரு ஊரின் எல்லையிலும் பொம்மை ஒன்று நிறுத்தப்பட்டது. புதிய நபர் யாராவது வந்தால், 'யார் நீ? எங்கு வந்தாய்?' என அது கேட்கும். இந்த உரையாடல் ஊரிலுள்ள அனைவருக்கும் உடனடியாக கேட்கும். இதனால் புதிதாக வந்தவரைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்வர்.
* திருடு போன பொருளைக் கண்டறிய 'தபேலா' ஒன்றை வைத்திருந்தார் மன்னர். பொருளை இழந்தவர் இந்த தபேலாவில் ஒருமுறை தட்டினால் போதும். அது 'யார் திருடியது? பொருள் எங்கு மறைக்கப்பட்டுள்ளது? என்ற விபரத்தை சொல்லும்.
* பெண் பொம்மை ஒன்று இருந்தது. அதனிடம் காணாமல் போனவர் பற்றிச் சொன்னால் உடனடியாக சொல்லி விடும்.
இது போல அதிசயக் கருவிகள் மட்டுமின்றி தான் ஏறிச் செல்வதற்கு தங்கம், வெள்ளியால் ஆன பல்லக்கு வைத்திருந்தார். அது நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆணவத்தால் 'நானே இறைவன்' என பிரகடனம் செய்தான்.
நாடெங்கும் தன்னைப் போலவே உருவச்சிலை செய்து வணங்க வேண்டும் எனக் கட்டளையிட்டான்.

