
டில்லி க்யாலாவில் குடியிருக்கும் கருமாரியம்மனை வெள்ளியன்று தரிசித்தால் திருமணத்தடை விலகும். திங்களன்று இங்குள்ள புற்றில் பால் ஊற்றி வழிபட நாகதோஷம் தீரும்.
இக்கோயிலில் அகத்திய முனிவருக்கு காட்சியளித்த கருமாரி அம்மனுக்கு விளக்கேற்றினால் விரும்பிய வரம் கிடைக்கும். சித்தரான காகபுஜண்டர் இத்தலத்தை 'உத்திர வேதபூமி' எனப் பெயரிட்டு அழைத்தார்.
முன்பு இப்பகுதியில் நாகப்புற்று ஒன்று இருந்தது. அதை பக்தர்கள் அம்மனாக கருதி வழிபட்டனர். காலப்போக்கில் கருமாரி அம்மனுக்கு கோயில் கட்டப்பட்டது. இங்கு விநாயகர், முருகன், சிவன், ஆஞ்சநேயர், கால பைரவர், தட்சிணாமூர்த்தி, துர்கை, நவக்கிரக சன்னதிகள் உள்ளன. தற்போது கோதண்ட ராமர், தன்வந்திரி, சப்த கன்னியர் சன்னதிகள் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் விரைவில் நடக்க இருக்கிறது.
ராகுதோஷம், திருமணம் ஆகாதவர்கள் வெள்ளியன்று அம்மனுக்கு அபிேஷகம் செய்து வஸ்திரம் சாத்துகின்றனர். சித்திரை திருவிழாவில் அக்னி சட்டி எடுத்து தீக்குழி இறங்கும் வைபவம் நடக்கிறது. குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சியின் போது சிறப்பு பூஜை நடக்கும்.
எப்படி செல்வது: * பஸ்சிம் விஹார் மேற்கு மெட்ரோ நிலையத்தில் இருந்து 1 கி.மீ.,
* ஜனக்புரி மேற்கு மெட்ரோ நிலையத்தில் இருந்து 4 கி.மீ.,
விசேஷ நாள்: சித்திரை திருவிழா, நவராத்திரி, அன்னாபிஷேகம், மகாசிவராத்திரி.
நேரம்: காலை 6:30 - 12:00 மணி; மாலை 5:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 98713 05767, 98188 73438
அருகிலுள்ள கோயில்: விகாஸ்புரி மூகாம்பிகை கோயில் 4 கி.மீ., (தொழில் வளர்ச்சிக்கு...)
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:30 - 8:30 மணி
தொடர்புக்கு: 97179 88101