நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விண்ணுலகம் சென்ற ஒரு மனிதரை அங்கிருந்த தேவதுாதன் தடுத்தான். மண்ணுலகில் நீ செய்த செயல் பற்றி சொல். உன் மதிப்பெண்ணை பொறுத்தே அனுமதி கிடைக்கும்'' என்றான்.
''தினமும் தேவாலயம் செல்வேன். உதவி கேட்டவருக்கு மறுக்காமல் செய்வேன். மக்களின் நல்வாழ்வுக்காக சேவை செய்தேன். பள்ளி ஆசிரியராக பணியாற்றினேன்'' என்றார் அந்த நபர்.
ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில், 'பின்புலமாக நின்று என்னை இயக்கியவர் ஆண்டவர்' என்றார். என்ன அதிசயம். விண்ணுலகின் வாசல் திறந்தது.