நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிரீக் நாட்டைச் சேர்ந்த ஏழைப்பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. வறுமையின் பிடியில் சிக்கிய அவள் தன் வேதனையை வெளிப்படுத்தும் விதமாக 'யாபேஸ்' என குழந்தைக்குப் பெயரிட்டாள்.
இதற்கு ஹீப்ரு மொழியில் 'துயரத்தில் பிறந்தவன்' எனப் பொருள். அன்றாடப் பாட்டுக்கு அவதிப்படும் நிலையில் செல்வச் செழிப்புடன் குழந்தை வாழ வேண்டும் என தினமும் பிரார்த்தனை செய்யத் தொடங்கினாள். அதிர்ஷ்டவசமாக புதையல் ஒன்று கிடைத்தது. ஒரே நாளில் செல்வச் சீமானாக யாபேஸ் மாறினான். பிரார்த்தனை ஒருநாளும் வீண் போகாது.