நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் கூட்டம் ஒன்றில் பேசும் போது, 'தான் இருமுறை வேலையில் இருந்து நீக்கப்பட்டேன்' எனச் சொன்னார். இதைக் கேட்ட அனைவரும் உன்னிப்பாக கவனித்தனர். ''முதலில் டெலிபோன் ஆப்பரேட்டராக வேலை செய்தேன். அந்த மெஷினையே ஆராய்ச்சி செய்து கொண்டிருந்ததால் செய்திகளை அனுப்ப மறந்ததால் வேலையும் போனது. இன்னொரு வேலை கிடைத்தது. அது பழைய கட்டடம்.
ஒரே எலித் தொல்லை. எலி பிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தேன். எனக்கு கொடுத்த வேலையை விட்டு விட்டு வேறு வேலை செய்ததால் அங்கிருந்தும் நீக்கப்பட்டேன். இதன் மூலம் நான் தெரிந்து கொண்டது... பணியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பது தான்'' என்றார் எடிசன்.