
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோட்டத்தில் இருந்த பணக்கார நண்பனான ஜானிடம், 'நீ பணக்காரன் ஆனது எப்படி' எனக் கேட்டார் ஜோசப்.
அமைதியாக இருந்த ஜான் அங்கு வந்த பறவை, விலங்குகளுக்கு உணவு அளித்தபடி நின்றார். பின்னர் மரத்தடியில் அமர்ந்து முந்திரிப் பருப்பை இருவரும் சாப்பிட்டனர். அப்போது குரங்கு ஒன்று அதை அள்ளிக் கொண்டு மரத்தில் ஏறியது. அப்போது பருப்புகள் கீழே விழுந்தன. அதை எடுக்க இறங்கிய போது அதன் கையில் மீதி இருந்த பருப்பு விழுந்தது. அதைப் பார்த்த ஜான், 'இதில் இருந்து என்ன புரிந்து கொண்டாய்' எனக் கேட்டார்.
ஜோசப் வாய் திறக்கவில்லை. அப்போது ஜான், ' கீழே விழுந்ததை எடுப்பதற்குள் கையில் உள்ளதையும் குரங்கு இழந்தது போல செயல்படக் கூடாது. கையில் இருப்பதை பாதுகாப்பது நல்லது' என்றார்.