நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பெரியவர்களிடம் அனுமதி பெற்று எந்த பணியையும் தொடங்குங்கள். அதுவே வெற்றிக்கு சமம்.
* யார் மீதும் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தாதீர். அது உங்களிடமே பெருகும்.
* யாரும் உதவவில்லை என வருத்தப்படுவதை விட, யாருக்கும் பாரமாய் இல்லை என சந்தோஷப்படுங்கள்.
* தினமும் மரம் செடி, கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றுங்கள்.
* பசித்தவருக்கு உணவு, கஷ்டப்படுபவருக்கு ஆதரவான வார்த்தை இரண்டும்
எளிமையான செயல்.
* உங்கள் கோபம் ஒருவரால் துாண்டப்பட்டால் பொறுமை காப்பது அவசியம்.
* ஏன் எதற்கு என்று கேட்காமல் செயலில் இறங்குபவர் முட்டாளாகவே இருப்பார்.
* நல்லோருடன் இணக்கமாகவே இருங்கள்.