
விண் தேடியும் எட்டாதவனே
கண்ணிரண்டும் போதவில்லையே
முக்கண்ணும் எனக்கில்லையே
நமசிவாய
என் மனக்கண்ணை திறக்க வாராயோ
மண் சுமந்தவனும் நீயே
பொங்கும் கணல் சுமந்தவனும் நீயே
பெண் சுமந்தவனும் நீயே
பிறைமதி சுமந்தவனும் நீயே
நமசிவாய
என் சுமைகள் நீக்க வாராயோ
காரைக்கால் அம்மையாரும்
மங்கையர்கரசியும் திலகவதியாரும்
சிவநெறியை சிந்தையில் தேக்கினரே
தெய்வ மங்கையும் ஆனாரே
நமசிவாய
அதில் அணு ஞானமேனும் கொடுப்பாயா
சப்த தாண்டவமாடும் சபேசா
ஆனந்தமோ ஊர்த்துவமோ
சந்தியா காளிகா திரிபுர தாண்டவமோ
சம்ஹாரத் தாண்டவமோ
நமசிவாய
சம்சாரசாகரத்தில் ஆடும் எனைக்காப்பாயா
காப்பாயா கொடுப்பாயா திறப்பாயா
வாராயா என கேட்கும் என்னிருள் அகற்ற
அன்பே சிவமாய் அமர்ந்தாயோ
என்னுள்ளே உனைத்தேட சொன்னாயோ
நமசிவாய
உன் காதல் மனிதக்காதலல்லவே
புரிந்து கொள்வேன் ஒருநாளே
அபயமளிப்பாய் அநேகாத்மனே
அங்கயர்கன்னியின் அகிலேஷ்வரனே
ஆதிபுருஷனே ஆலகாலனே
ஆனந்தீஸ்வரா உனைப்பணிந்தேனே
நமசிவாய
உந்தன் திருநாமம் தினம் ஜபிப்பேனே
- தினமலர் வாசகி மாதங்கி சேஷமணி
Advertisement