/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
நல்லூர் சுவாமி ஞானப்ரகாசரின் முப்பொன் விழா
/
நல்லூர் சுவாமி ஞானப்ரகாசரின் முப்பொன் விழா
அக் 29, 2025

நல்லூர் சுவாமி ஞானப்ரகாசரின் முப்பொன் விழாவையொட்டி கடந்த ஞாயிறு அன்று யாழ் பல்கலை கழகம் வெகு சிறப்புடனும் கோலாகலமாக கைலாசபதி கலையரங்கு ஆய்வரங்க தொடக்க நிகழ்வை ஒட்டி புத்துணர்வுடன் காணப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தினை யாழ். பலகலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர், கலாநிதி. அ. சுகன்யா பாடினார்.கலையரங்கில் ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்த எழுத்தாளர் புஷ்பா கிறிஸ்டி பின்வருமாறு சொல்கிறார்,
எனக்கு நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரைத் தெரிந்திருக்க நியாயமில்லை. என் முதுமாணிக் கல்வியை முடித்த போது, எனக்கு டாக்டர் எஸ். ஜே. வி. சந்திரகாந்தன் 'நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரை' ஆய்வு செய்யுங்கள் என்ற சொல்லும் வரை.ஆனால், அன்று நான் தொடங்கிய அப்பணி, இன்று என்னை யாழ். பல்கலைக்கழக கைலாசபதி மண்டபத்தில் மேடையேற்றி, நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்றைப் படிக்க எனக்கு அனுமதி தந்தது பெருமைக்குரிய விடயமாகும். வரவேற்புரையை கோப்பாய், ஆசிரியப் பயிற்சிக் கலாசாலை அதிபர் சந்திரமெளலீசன் ஆற்றினார்.ஆசியுரையை யாழ் மறைமாவட்டக் குருமுதல்வர், அருட்தந்தை பி. ஜே ஜெயரட்ணம் ஆற்றினார்.
தலைமையுரையை யாழ் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் தி. வேல்நம்பி ஆற்றினார்.நிகழ்வின் முக்கிய பகுதியான ஆய்வரங்கமலர் வெளியீடு செய்யப்பட்டது. வெளியீட்டுரையை யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் சுபதினி ரமேஸ் ஆற்றினார். பலருக்கும் சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன. நன்றியுரையை திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குனர், யோன்சன் ராஜ்குமார் ஆற்றினார்.
யாழ் தமிழ்ச் சங்கம்யாழ் மறைமாவட்டமும்யாழ் அமலமரித் தியாகிகள் சபைஎனும் மூன்று இயக்கமும் கூட்டாகச் சேர்ந்து இவ்விழாவை சிறப்பான முறையில் முன்னேடுத்துச் சென்றனர்.
ஆய்வு நூலை வெளியிட்டவர் சுபோதினி ரமேஸ். நிகழச்சித் தொகுப்பாளராக இருந்தவர் நிவேதன் என்பவர். இவரை எனக்கு, கனடாவில் இருந்த போது, சிவன் இளங்கோ (டொரோண்டோ தமிழ் இருக்கை அமைய பெரும் பங்குவகித்தவர்) அறிமுகப்படுத்தினார்.
எனது ஆய்வு கட்டுரையுடன் ஓய்வுநிலைக் குரு, முதல்வர் ஞானமுத்து பிலேந்திரன் சுபோதினி ரமேஷ், மற்றும் ஒருவர் என நான்கு கட்டுரைகள் மேடையில் வாசிக்கப்பட்டன. அருமையான நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. கனடாவில் வசித்தாலும் சிறப்பும் பெருமை பொருந்திய யாழ் பல்கலைக்கழகம் சென்று என்னுடைய தமிழ் பணியை தொடர்தல் என்பது போற்றதக்க ஒன்றாகும். தமிழ் வெறும் மொழியல்ல அது வாழ்வியலுடன் நீக்கமற கலந்த உணர்வாகும் என்றார். - டொரோண்டோ கனடாவிலிருந்து தினமலர் செய்தியாளர் சுதர்சன்
Advertisement

