sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

அமெரிக்கா

/

செய்திகள்

/

அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் ஆற்றுக்கால் பகவதியம்மன் பொங்கல்

/

அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் ஆற்றுக்கால் பகவதியம்மன் பொங்கல்

அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் ஆற்றுக்கால் பகவதியம்மன் பொங்கல்

அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் ஆற்றுக்கால் பகவதியம்மன் பொங்கல்


மார் 04, 2024

Google News

மார் 04, 2024


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தன் கணவன்மீது அநியாயமாகத் திருட்டுப்பழி சுமத்திக் கொன்றதால், மன்னன் முன் வாதாடி வென்று, மதுரையைச் சுட்டெரித்தபின், சேரநாட்டில் கொடுங்கல்லூர் என்ற இடத்திற்கு அருகில் ஆற்றுக்கால் என்ற இடத்தில் இளைப்பாறிய கண்ணகிக்கு அங்கு ஒரு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. அதை ஆற்றுக்கால் பகவதி கோவில் என்று அழைக்கிறார்கள். இக்கோவில் பெண்களின் சபரிமலை என்னும் சிறப்புப் பெயரைப்பெற்று வருகிறது.

சபரிமலை சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்வது ஆண்களுக்கு எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு மாசி மாதம் பூரத் திருநாளில் இந்தப் பகவதி அம்மனுக்குப் பொங்கல் படைத்து வழிபடுவது பெண்களுக்கு முக்கியமான திருநாளாகும். இதை மலையாள மொழியில் ஆற்றுக்கால் பகவதி பொங்கல என்று கொண்டாடுகிறார்கள்.


அமெரிக்காவில் அரிசோனா மாநிலக் கேரள இந்து சமாஜம் இத்திருநாளை மிக விமரிசையாக அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் கொண்டாடினர். கிரண் மோகன், நீத்து கிரண், கிரிஜா மேனன், ஜிஜு அப்புக்குட்டன் ஆகியார் முன்வந்து நடத்தினர்.


இதற்காக ஆனைமுகன் கோவில் செயற்குழு அமர் தலைமையில் முதல்நாளே சென்று தகுந்த ஏற்பாடுகளைச் செய்தனர்.


கோவில் ராஜகோபுரத்துக்கு முன் அமைந்திருக்கும்கார் நிறுத்துமிடத்தில் கிட்டத்தட்ட நூறு பெண்கள், செங்கல் அடுப்புகளில் பொங்கல் வைத்தனர். பகவதி அம்மையின் பெரிய திருவுருவப் படத்தின் முன்னர், பெரிய பாத்திரத்தில், விறகுவைத்துப் பெண்களால் பொங்கல் கிளறப்பட்டது. இந்தப் பெருவிழா கோவில் அர்ச்சகர் ஜெயந்தீஸ்வரன் பட்டரால் தலைமைதாங்கி நடத்தப்பட்டது.


பொங்கல் வைத்து முடிந்து பகவதிக்குப் பூஜை நடத்தியபின் ஆண்கள் பொங்கலிட்ட பெண்டிருக்கு தலைவாழை இலையில் பொங்கலும், உணவும் பரிமாறினர். சேரநாட்டு முறைப்படி உணவும் சமைக்கப்பட்டிருந்தது.


அரிசோனா கேரள இந்து சமாஜத்தினர், இவ்விழாவில் பொங்கலிட்ட பெண்டிருக்கு உணவு சமைத்த பெண்டிருக்கும், கோவில் அர்ச்சகருக்கும், இவ்விழா நடக்கப் பெரிதும் முயன்ற ஸ்ரீநிவாச குப்தாவுக்கும் சாலவை போர்த்திக் கௌரவித்தனர்.


இத் திருநாள் தினத்தன்று மகம், பூரம் இரு நட்சத்திரங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வந்ததால், ஆடலரசன் அம்பலவாணனுக்கு மாசிமகம் திருநாளும் கொண்டாடப் பட்டது. ஆண்டுக்கு ஆறு தடவை மட்டும் நடராஜருக்கு நடக்கும் திருநாள்களில் ஒன்றான இதை கோவில் அர்ச்சகர்களான வரப்பிரகாஷ் ஆசார்யுலுவும், முரளிகிருஷ்ண கந்தூரியும் சிறப்பாக மந்திரம் ஓதி அன்னை சிவகாமியுடன் இணைந்த நடராஜப் பெருமானுக்கு பல திரவியங்களுடன் புனித நீராட்டு நடத்தினர்.


மாசிமகம் நடராஜர், திருமால், முருகன் ஆகியோருக்கு எவ்விதத்தில் சிறப்பு என்பதைப் பற்றியும் அடியவருக்கு எடுத்துரைக்கப்பட்டது.


கேரள இந்து சமாஜத்திலிருந்து பத்து, கலாசிருஷ்டியிருந்து வந்த ஒருவருடன் மொத்தம் பதினொரு மங்கையர் ஆடலரசனுக்கு நாட்டிய அஞ்சலி செய்து வந்திருந்த அனைத்து அடியவரையும் அருள் வெள்ளத்தில் மூழ்கடித்தனர்.


அர்ச்சகர்கள் வரப்பிரகாஷும், முரளிகிருஷ்ணாவும், சிறப்பான மந்திரங்கள் ஓதி நாட்டிய அஞ்சலி செய்த பதினொருவரையும் கௌரவித்தனர்.


நான்கு வேதங்களுடன் தேவாரம் ஓதியபின்னர், தீபாராதனை நடந்து மாசிமகம் திருநாள் நிறைவேறியது.


விழாக்காண வந்திருந்த நூற்றுக்கணக்கான அன்பர்களுக்கு அன்னதானம் குழு அமுதளித்து மகிழ்ந்தது. (ஆற்றுக்கால் பகவதி பற்றிய குறிப்புக்கு நன்றி: சுனில் அனந்தன்)


- நமது செய்தியாளர் ஒரு அரிசோனன்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us