sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

அமெரிக்கா

/

நிகழ்ச்சிகள்

/

தமிழால் இணைவோம் : பாரதியின் படைப்புலகம் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

/

தமிழால் இணைவோம் : பாரதியின் படைப்புலகம் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

தமிழால் இணைவோம் : பாரதியின் படைப்புலகம் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

தமிழால் இணைவோம் : பாரதியின் படைப்புலகம் - பன்னாட்டுக் கருத்தரங்கம்


செப் 08, 2025

Google News

செப் 08, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகத் தமிழர்களைத் தமிழால் ஒன்றிணைக்கும் உயர்வான எண்ணத்துடன் துவக்கப்பட்ட உலகத் தமிழ்ப் பேரியக்கம் இணையவழியில் இதுவரை 8000 நிகழ்வுகளைத் தாண்டி வெற்றிநடையோடு மகிழ்வோடு, தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

நாள்தோறும் இணையவழியில் தமிழ் ஆர்வலர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என அத்துனை பேரையும் தமிழின்பால் ஈர்த்து அவர்கள் கற்ற தமிழ் இலக்கியங்களை உரையாட வைத்து நிகழ்வுகளை நடத்திக் காணொளிகளாக வெளியிட்டு மக்கள் மனங்களில் தமிழ் உணர்வூட்டிக் கொண்டிருக்கின்றது.

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் தமிழ் அறிவு, பொது அறிவை வளர்க்கப் பல நேரடி நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கின்றது. அதன் ஒரு பகுதியாகக் கல்லூரிகளில் தமிழில் ஆய்வை மேம்படுத்தும் வகையில் பேராசிரியர்களும், ஆய்வு மாணவர்களும், தமிழ் ஆர்வலர்களும் பங்கேற்கும் வகையில் நேரடி நிகழ்வுகளாகப் பன்னாட்டுக் கருத்தரங்கங்களைக் கல்லூரிகளின் ஒத்துழைப்போடு நடத்தித் தமிழுக்குச் செழுமையூட்டிக் கொண்டிருக்கின்றது.

மதுரை- குற்றாலம்

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியுடன் இணைந்து முதல் முதலாக 04.03.2023 அன்று வெகு சிறப்பாகப் பன்னாட்டுக் கருத்தரங்கத்தை நடத்தி ஆய்வு மலரை வெளியிட்டது.
இரண்டாவது பன்னாட்டுக் கருத்தரங்கத்தைக் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியுடன் இணைந்து 6.10.2023 அன்று மிகப் பெருமை கொள்ளும் வகையில் நடத்தி ஆய்வு மலரை வெளிக் கொணர்ந்தது.

மூன்றாவது பன்னாட்டுக் கருத்தரங்கத்தை 14.2.2025 அன்று கோவிலூர் காரைக்குடியில் ஸ்ரீ நாச்சியப்பா கலை அறிவியல் கல்லூரியுடன் இணைந்து மிகச் சிறப்பாக நடத்தி ஆய்வு மலரை ஆய்வாளர்களின் கரங்களில் தவழவிட்டது.

இந்த வருடம் கோவையில் அமைந்துள்ள பி.பி.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் இணைந்து பைந்தமிழ்த் தேர்ப் பாகன் பாரதியின் நினைவு நாள் 11.9.2025 அன்று 'பாரதியின் படைப்புலகம்' என்ற தலைப்பில் நான்காவது பன்னாட்டுக் கருத்தரங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

ஆறு மாதங்களுக்கு ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கத்தைக் கல்லூரிகளுடன் இணைந்து நடத்துவது கருத்தரங்க வரலாற்றில் மிகப்பெரிய சாதனை. தமிழால் இணைவோம் உலகத் தமிழ்ப் பேரியக்கம் மிகச் சிறப்பாகப் பன்னாட்டுக் கருத்தரங்கங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. இதுவரை நடத்திய கருத்தரங்கத்திற்கெல்லாம் இல்லாத மற்றொரு சிறப்பை இக்கருத்தரங்கம் பெற்றுள்ளது. பன்னாட்டுக் கருத்தரங்கம் என்பதை மெய்ப்பிக்கின்ற வகையில் அமெரிக்கா, ஓமன், கனடா, மலேசியா, சிங்கப்பூர் என்று உலகின் பல நாடுகளில் இருந்தும் ஆய்வுக் கட்டுரைகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

மகாகவி பாரதி


இக்கட்டுரைகள் மகாகவியின் மகுடத்தை அலங்கரித்துக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் எனத் தாய்மொழிக்குப் புகழாரம் சூட்டிய புதுக்கவிதை நாயகனின் புகழ் தமிழர் வாழும் பூமிப்பந்து முழுவதும் நிறைந்திருக்கின்ற உண்மையை இக்கட்டுரைகள் நமக்கு உணர்த்துகின்றன.

இக்கருத்தரங்கத்தின் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்டவர்களைப் பாரதியின் நூல்களைப் படிக்க வைத்துப் பாரதியைய் பற்றிய பல் நோக்குச் சிந்தனைகளை வெளிப்படுத்த வைத்திருக்கின்றோம். பாரதியின் படைப்புகளை வெளிப்படுத்தும் வகையில் மிகச் சிறப்பான ஆய்வு மலரையும் வெளிக் கொணர்ந்திருக்கின்றோம். ஏற்கனவே கவி வேந்தன் பாரதியைப் பாரெல்லாம் பரப்ப பாரதி ஒரு லட்சம் என்ற இணைய வழி நிகழ்வுகளை நடத்தி உலகம் முழுவதும் உள்ள ஒரு லட்சம் தமிழர்களைப் பாரதியின் புகழ் பாட வைத்த இயக்கம் தமிழால் இணைவோம் உலகத் தமிழ்ப் பேரியக்கம்.

இப்பன்னாட்டுக் கருத்தரங்கை சிறப்பாக நடத்த உறுதுணையாக நின்ற பி.பி.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர், தமிழ்த்துறைத் தலைவர், கல்விக்குழுமத்தலைவர், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சிறப்பு வாழ்த்துகள்.

கருத்தரங்கம் சீரோடும் சிறப்போடும் நடக்க உடனிருந்து உதவும் தமிழால் இணைவோம் நிறுவனர் கவின்கலை வேந்தர் சத்யநாராயணராஜ் பாலகுரு அவர்கள், துணைத் தலைவர் மதிப்புறு முனைவர் மீனா திருப்பதி அவர்கள், தலைமைச் செயலர் மற்றும் கருத்தரங்க குழுத் தலைவர் வாழும் வரலாறு சுப்ரமணியன் ஐயா அவர்கள், வாழும் வரலாறு முதல்வர் முனைவர் ர.சந்திரமோகன் அய்யா, கலைமாமணி பத்மநாபன் அய்யா, வாழும் வரலாறு முனைவர் கோபால் ஐயா, பன்னாட்டுக் கருத்தரங்கம் சிறக்க வெளி நாடுகளில் இருந்து கட்டுரைகள் பெற்று, திருத்தம் செய்து நூலாக்கப் பணியிலும் ஈடுபட்ட பன்னாட்டு இயக்குநர் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி, கூட்டு மாவட்ட ஆளுநர்கள் கவிஞர் வெண்ணிலா காமராஜ், முனைவர் சி. தீபா, முத்துஞானம், மாவட்ட ஆளுநர்கள் முனைவர் சரசுவதி அய்யப்பன், மு.அழகுராஜ் ஐயா உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
தமிழ்த்தேன் பருக, அனைவரும் வருக!
--- நமது செய்தியாளர் ,ஷீலா ரமணன்.


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us