/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
ஒளி பெற்ற ஆண்டாக - தன்னிகரற்ற ஆண்டாக எதிர்காலம் அமையும்: மகாமகரிஷி குருமஹான்
/
ஒளி பெற்ற ஆண்டாக - தன்னிகரற்ற ஆண்டாக எதிர்காலம் அமையும்: மகாமகரிஷி குருமஹான்
ஒளி பெற்ற ஆண்டாக - தன்னிகரற்ற ஆண்டாக எதிர்காலம் அமையும்: மகாமகரிஷி குருமஹான்
ஒளி பெற்ற ஆண்டாக - தன்னிகரற்ற ஆண்டாக எதிர்காலம் அமையும்: மகாமகரிஷி குருமஹான்
டிச 23, 2025

' தமிழகம் நிமிர்ந்தால் தரணியே உயரும். ஞானத் தமிழகம் உயர தென்னகம் உயரும், வளமான தமிழகம், வலிமையான பாரதம், அமைதியான உலகம் மலரும். சத்திய யுகத்தைக் காக்க வந்த, சத்தி யுகத்தைப் படைக்க வந்த சத்தியவான்கள், சத்தியவதிகள் நாம். ஒன்றுபடுவோம், ஒன்று படுத்துவோம். தெய்வீகத் தன்மை வெளிப்படட்டும்.” என 36 ஆவது பிரபஞ்ச நல மகா தவவேள்வி, உலக தியான தினம் நடைபெற்றபோது உலக சமாதான அறக்கட்டளை நிறுவநர் தத்துவ தவ உயர்ஞான பீடாதிபதி, பொற்கலசப் பிரணவாலயப் பேராசான், ஜெகத்குரு மகா மகரிஷி குருமகான் பரஞ்ஜோதியார் குறிப்பிட்டார்.
உளப் பிணி, உயிர்ப் பிணி, உடற் பிணி எனும் முப்பிணி நீக்கும் மூவா மருந்து, குண்டலிணி எனும் அருமருந்து அருளிக் காக்கும் உயிர்ப் பிணி மருத்துவர் ஜெகத்குரு குருமகான் மையத்தில் எழுந்தருள, புறவுடற்பிணி போக்கும் மருத்துவர்கள் டாக்டர் கே.மாதேஸ்வரன் தலைமை ஏற்க, டாக்டர் ஜே.எஸ்.புவனேஸ்வரன், டாக்டர் டி.ரவிக்குமார் வீற்றிருக்க, உலக அமைதி தினத்திற்குச் சிறப்பு சேர்க்குமாறு ஐக்கிய நாடுகள் சபை ஜெனிவா தலைமை நிர்வாக அதிகாரி ராஜா பி ஆறுமுகம் முன்னிலை வகிக்க, வாணிபம் செய்வார்க்கு வாணிபம் பேணி பிறவும்தமபோற் செயும் ஆர்.அருள்கார்த்திக் பங்கேற்க 36 ஆவது பிரபஞ்ச நல மகா தவ வேள்வி கோலாகலமாகத் தொடங்கியது.
அரங்கம்நிறை அமெரிக்கா, ஜெனிவா, மலேசியா, சிங்கப்பூர், கனடா உள்ளிட்ட உலகளாவிய சீடர்கள் உள்ளிட்ட மெய்ஞானச் செல்வர்கள், செல்வியர், மெய்ஞான ஆசிரியர்கள் உருக்கத்தோடு அமர்ந்திருக்க குருமகான் மேலும் உரையாற்றுகையில் “ தியானம் உடலின் களைப்பை நீக்கி, மனச்சோர்வைப் போக்கி, அறிவின் ஐயங்களை அகற்றி நற்சிந்தனைகளை மேலோங்கச் செய்யும். மனிதனை மாமனிதனாக்கி மகிழ வைப்பது தியானம். ஒளி பெற்ற ஆண்டாக, தன்னிகரற்ற ஆண்டாக, சத்திய யுகம் மலரும் ஆண்டாக இந்த உலக தியான தினம் உருவாக்கும். உலகத்தைத் தெரிந்து கொண்ட அளவு உண்மைப் பொருளைத் தெரிந்து கொள்ளவில்லை. அதற்கு மனமாற்றம் குணமாற்றம் தேவை. உள் விழிப்பு, ஞான விழிப்பு, ஆன்ம விழிப்பு தேவை. அதை தியானம் வழங்குகிறது. நாளைய உலகம் நல்லுலகமாக மலரும். அற ஆட்சி, நல்லோர் ஆட்சி மலர்ந்தே தீரும். சர்வ தேச நல்லெண்ணத்தை விதைப்போம். சுய ஆட்சி, நகராட்சி, மாநகராட்சி, மாநில ஆட்சி, சர்வதேச நல்லாட்சி, ஓர் உலக சமதர்ம சமத்துவ அற ஆட்சி, நல்லாட்சி மலர்ந்தே தீரும். சுயநலத்தால் அறம் குறைந்து மறம் ஓங்கியது. அறம் காக்க அறம் ஓங்கும். வருங் காலத்தில் தெய்வீக சக்தி ஓங்கி சமதர்ம சமுத்துவ நல்லாட்சி, ஓருலக சமதர்ம சமத்துவ அற ஆட்சி, உலகப் பொது நிர்வாகம், உலகப் பொது நாணயம் அமையட்டும் தீவிரவாதம் தணியட்டும் நதி நீர் இணைப்பு விரைவாக நடைபெறட்டும் நீர்வழிச் சாலை துரிதமாக அமையட்டும். அன்னை பூமி நீடூழி வாழ்க . பிரபஞ்சம் நீடூழி வாழ்க. வளர்க மெய்ஞானம் வாழ்க சமாதானம் உலக நலம் காப்போம் உலக அமைதி காப்போம். இறையருளால் சத்திய யுகம் காப்போம்.
- சிங்கப்பூரிலிருந்து நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்
Advertisement
Advertisement
Advertisement

