/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் மாதாந்திரநிகழ்ச்சி
/
வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் மாதாந்திரநிகழ்ச்சி
வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் மாதாந்திரநிகழ்ச்சி
வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் மாதாந்திரநிகழ்ச்சி
டிச 14, 2025

'வாழ்வியல் இலக்கியப் பொழில்' அமைப்பின் 98ஆவது மாதாந்திர நிகழ்ச்சி பொங்கோல் சமூக மன்றத்தில் நடைபெற்றது.'மூப்பில்லா முதல்மொழியே' என்ற சிங்கப்பூர்த் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலோடு நிகழ்ச்சி தொடங்கியது. பொதுப் பிரிவில், அமைப்பின் உறுப்பினர் தீபிகா வரவேற்றார். தொடர்ந்து வாழ்வியல் இலக்கியப் பொழிலின் 'பொழில் வாழ்த்துப் பாடல்” இசைக்கப்பட்டது.
சிறுவர்கள் அங்கத்தில், சாரா கண்மணி அருண் நிஷாந்த்- 10திருக்குறள்படைத்தார். நிலா கண்மணி அருண் நிஷாந்த், நிலாப் பாடல் ஒன்றைப் பாடினார். சிவானந்தம் சிவமதி, ஏலாதி என்ற நூலைப் பற்றிய குறிப்புகளுடன்பாடல் சிலவற்றைப் பாடினார் .வர்ணிகா வினேஷ் மனோ, சிறுவர் பாடல்கள் சிலவற்றைப்பாடினார். ரியான்ஷி முத்துக்குமார் சிறுவர் பாடல் பாடினார்.
அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல. கிருஷ்ணமூர்த்தி அறிமுகவுரை நிகழ்த்தினார். தமிழரின் மறமும் அறமும் - புறநானூறு” என்றதலைப்பில் கோயம்புத்தூர் நிர்மலா மகளிர் கல்லூரி உதவிப்பேராசிரியர் க. பிரியா சிற்றுரையாற்றினார் .ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் வி. புவனேஸ்வரி பழமொழி நானூற்றில் உளவியல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சி முழுவதும் காணொளியாக முகநூல்வழி நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சி பொழில் பண்பலையில் நேரலையாக ஒலிபரப்பப்பட்டது. அழகுராஜ் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். உஷா கிருஷ்ணமூர்த்தி நன்றிகூறினார். அதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் பிறந்தநாள் கொண்டாடும் ஜீவஜோதிகா, ரியான்ஷி முத்துக்குமார் ஆகியோருக்குப் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
முகநூலில்கண்டுகளிக்க:
https://www.facebook.com/share/v/1MjL5cV8EV/
அமைப்பின்இணையப்பக்கம்: https://www.ilakkiyapozhil.com
- சிங்கப்பூரிலிருந்து நமது வாசகர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி.
Advertisement

