/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூரில் தீபாவளி ஒளியூட்டு விழா - உற்சவ பேரணி கோலாகலம்
/
சிங்கப்பூரில் தீபாவளி ஒளியூட்டு விழா - உற்சவ பேரணி கோலாகலம்
சிங்கப்பூரில் தீபாவளி ஒளியூட்டு விழா - உற்சவ பேரணி கோலாகலம்
சிங்கப்பூரில் தீபாவளி ஒளியூட்டு விழா - உற்சவ பேரணி கோலாகலம்
செப் 08, 2025

“ ஒவ்வொரு தனிநபரிலும் உள்ள உள்ளொளியை அடையாளம் கண்டு மற்றவர்கட்கும் வழிகாட்டும் ஒளியாக அமைந்து அனைவரையும் ஒன்றினைந்து உயர்த்துவதே தீப ஒளி உணர்வு. ஒவ்வொரு பண்டிகையையும் பன்முகக் கலாச்சாரமாகக் கருதி ஒன்றிணைந்து கொண்டாடுவதுதான் சிங்கப்பூரின் வழிமுறை “ என “ லிட்டில் இந்தியா ஆர்கேட் முன் அமைக்கப்பட்டிருந்த கிராண்ட் ஸ்டாண்ட் மேடையில் செப்டம்பர் 6 ஆம் தேதி இரவு நடைபெற்ற பிரம்மாண்ட தீபாவளி ஒளியூட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் உரையாற்றுகையில் குறிப்பிட்டார். இந்திய சமூகத்தின் பலதரப்பட்டவரும் பல்லினச் சமூகத்தினரும்.இணைந்து பங்கேற்றது சிங்கப்பூரின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆட்டம் - பாட்டம் - கொண்டாட்டம்
லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் - மரபுடைமைச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவில் சிறப்பு விருந்தினர் - வெளிநாட்டுப் பிரதிநிதிகள் - பொது மக்கள் என ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர் என்பது குறிபிபிடத்தகுந்ததாகும் நவம்பர் 9 ஆம் தேதி வரை 64 நாட்கள் லிட்டில் இந்தியா வட்டாரமே ஒளி வெள்ளத்தில் மிளிரும். சிங்கப்பூரின் 60 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு 600000 : எல்இடி மின் விளக்குகள் லிட்டில் இந்தியா கடைத் தொகுதியிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு 42 அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் தீபாவளிக் கொண்டாட்டக் கருப்பொருள் “ ஆட்டம் - பாட்டம் - கொண்டாட்டம் “ என்பதாகும்.
ஒளியூட்டு விழாவில் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் - கலாச்சார சமூக இளையர்துறை மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் - தேசிய வளர்ச்சி மற்றும் வர்த்தகத் தொழில் துணை அமைச்சர்ஆல்வின் டான் - மத்திய சிங்கப்பூர் வட்டார மேயர் டெனிஸ் புவா - வெளிநாட்டுத்தூதர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். தீபாவளிக் கொண்டாட்டங்களுக்குப் பங்களித்த ஏறத்தாழ 20 சமூக அமைப்புக்களுக்கு அதிபர்பரிசுகளை வழங்கி கவுரவித்தார். ஹிந்து அறக்கட்டளை வாரியம் உட்பட பல்வேறு அமைப்புக்களும் ஆலயங்களும் அதிபர் சவால் இயக்கத்திற்காக100000 வெள்ளி திரட்டி அதற்கான காசோலையை பலத்த கரவொலிக்கிடையே வழங்கினர்.
வண்ணமயமான உற்சவ சாலை அணிவகுப்பில் 25 பல்லின சமூக - கலை அமைப்புக்களைச்சேர்ந்த 700 க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்
ஸ்ரீ நாராயணா மிஷனைச் சார்ந்த 60 முதல் 94 வயதுடைய 23 மூத்தோர் பங்கேற்றமை குறிப்பிடத்தகுந்ததாகும். முன்னோக்கிச் செல்வோம் ஒன்றாக- சிண்டாவுடன் ஓர் பயணம் ' என்ற கருப்பொருளில் இளம் கலைஞர்கள் - பயனாளர்கள் - இளம் கலைஞர்களும் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். அணிவகுப்பு ஹேஸ்டிங்ஸ் சாலையில் தொடங்கி பெர்ச் சாலையில் நிறைவு பெற்றது.
நவம்பர் 11 ஆம் தேதி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு “ லிஷா “ ஏற்பாடு செய்துள்ளது. சுருங்கக் கூறின் சிங்கப்பூரர்களுக்கும் சுற்றுலாவாசிகளுக்கும் கண்ணுக்கும் கருத்துக்கும் பல்சுவை விருந்தாக இவை அமையும் என்பது திண்ணம்.
--- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்.
Advertisement