/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
10 ஆம் வகுப்புத் தேர்வில் அமீரக அளவில் முதலிடம் பெற்ற தோப்புத்துறை மாணவர்
/
10 ஆம் வகுப்புத் தேர்வில் அமீரக அளவில் முதலிடம் பெற்ற தோப்புத்துறை மாணவர்
10 ஆம் வகுப்புத் தேர்வில் அமீரக அளவில் முதலிடம் பெற்ற தோப்புத்துறை மாணவர்
10 ஆம் வகுப்புத் தேர்வில் அமீரக அளவில் முதலிடம் பெற்ற தோப்புத்துறை மாணவர்
மே 21, 2025

துபாய்: சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் துபாய் அல் கூஸ், ஜெம்ஸ் அவர் ஓன் இந்திய பள்ளிக்கூடத்தில் படித்த தோப்புத்துறை மாணவர் ஹபீத் மீரா 99.6 சதவீதம் மதிப்பெண்களுடன் அமீரக அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு : ஆங்கிலம் 90, அரபி 100, கணிதம் 99, அறிவியல் 100, சமூக அறிவியல் 99, கூடுதல் பாடமான செயற்கை நுண்ணறிவில் 100 ஆகும். இவரது தந்தை சாகுல் ஹமீது மஜீத் மரைக்காயர் துபாயில் ஷிப்பிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தாயார் ஷம்சியா பேகம் இல்லத்தரசி.
இது குறித்து மாணவர் ஹபீத் மீரா கூறியிருப்பதாவது, நான் மற்ற மாணவர்களைப் போலவே வழக்கமாக படித்து வந்தேன். கோடை விடுமுறையில் சிறிது படிக்க ஆரம்பித்து, பள்ளிக்கூட நாட்களின் அன்றைக்கு நடத்தப்படும் பாடங்களை அன்றே படித்து விடுவேன். மேலும் சாப்பிட வேண்டிய நேரத்தில் சாப்பிடுவேன். பொழுது போக்கிற்காக குறிப்பிட்ட நேரம் ஒதுக்குவேன். இதனால் தேர்வு நேரத்தில் எனக்கு மிகவும் எளிதாக இருந்தது. இதுவே எனது வெற்றிக்கு காரணமாக அமைந்திருந்தது. மேலும் எனது பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் பெரிதும் ஒத்துழைப்பு வழங்கினர் என தெரிவித்தார்.
அமீரக அளவில் சிறப்பிடம் பெற்ற ஹபித் மீராவுக்கு பள்ளிக்கூட முதல்வர் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement