/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
சவுதி அரேபியா முழுவதும் தமிழர் திருநாள் கொண்டாட்டம்
/
சவுதி அரேபியா முழுவதும் தமிழர் திருநாள் கொண்டாட்டம்
சவுதி அரேபியா முழுவதும் தமிழர் திருநாள் கொண்டாட்டம்
சவுதி அரேபியா முழுவதும் தமிழர் திருநாள் கொண்டாட்டம்
ஜன 06, 2025

சவுதி அரேபியா முழுவதும் தமிழ் கலாச்சார பண்பாட்டினை போற்றிடும் விதமாக தமிழ் மக்களை ஒன்றிணைத்து தமிழர் திருநாளாம் பொங்கல் சமத்துவ விழாவாக பல்வேறு தமிழ்ச்சங்கங்கள் சார்பாக கொண்டாடப்படுகிறது. தாயிஃப் தமிழ்ச்சங்கம் சார்பில் 17.01.2025 அல் அசா தமிழ்ச்சங்கம் சார்பாக 17..01 .2025 ஜுபைல் தமிழ்ச்சங்கம் சார்பாக 24.01.2025 அன்று கொண்டாடப்படுகிறது.
இவ்விழாக்கள் ஒரு நாள் முழுவதுமாக நடைபெறும் தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றிடும் விதமாக பொங்கல் வைத்தல், சிலம்பம், ஒயிலாட்டம், தமிழர் பாரம்பரிய உடையணிதல் போட்டி, கோலப்போட்டி, கயிறு இழுத்தல், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப்போட்டி, தமிழ் பாரம்பரிய நடனங்கள், விருந்தினர்களை மகிழ்விக்கும் விதமாக சிறுவர் சிறுமியர்களுக்கென பிரத்தோய போட்டிகள் நடைபெறும்.
வாழை மர தோரணங்கள் உள்ளிட்ட முற்றிலும் தமிழர் பண்பாடு கலாச்சாரத்தை போற்றிடும் விதமாகவும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பொங்கல் என சமத்துவ விழாவாகவும் தமிழ் குடும்பத்தினர் இளைஞர்கள் சிறுவர்கள் கலந்து கொள்ளும் தமிழர்களின் சங்கம்மாக தமிழர் பாரம்பரிய சுவை மிகு உணவுகளுடன் வெகு சிறப்பாக கொன்டாடப்படுகிறது என சவுதி அரேபியா தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிவணப்பாளர் பொறியாளர் காஜா மைதீன் தெரிவித்தார்
- நமது செய்தியாளர் காஜா மைதீன்
Advertisement