/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
சவூதி நிறுவன நாள் - இசை, கலாச்சாரம், ஒற்றுமையின் விழா
/
சவூதி நிறுவன நாள் - இசை, கலாச்சாரம், ஒற்றுமையின் விழா
சவூதி நிறுவன நாள் - இசை, கலாச்சாரம், ஒற்றுமையின் விழா
சவூதி நிறுவன நாள் - இசை, கலாச்சாரம், ஒற்றுமையின் விழா
பிப் 26, 2025

அல் அசா தமிழ்ச் சங்கத்தின் சார்பில், சவூதி நிறுவன நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த விழாவில், தமிழ் கலாச்சாரத்தின் மகிமை, இசையின் இனிமை, மற்றும் சமூக ஒற்றுமையின் மெருகான தன்மை வெளிப்பட்டது. இன்னிசை நிகழ்ச்சி: கலைஞர்களின் மயக்கும் இசைமழை நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, தம்மாமில் இருந்து DTS-தமிழ் இன்னிசை குழு நூர் முகமது தலைமையில் இசை நிகழ்ச்சி வழங்கியது. 15-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள், 40-க்கும் மேற்பட்ட பாடல்களை பல மொழிகளில் பாடி, இசையின் உலகத்தை அரங்கில் பறக்க வைத்தனர். தமிழக டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற சஞ்சிதா கார்த்திக் சிறப்பு பாராட்டை பெற்றார். இசைக்குழுவினருக்கு அல் அசா தமிழ்ச் சங்கம் சார்பில் கௌரவிப்பு வழங்கப்பட்டது.
போட்டிகள் - திறமைகளை வெளிப்படுத்திய சிறப்பான தருணம் நிகழ்வின் ஒரு பகுதியாக, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. கலாச்சாரப் போட்டிகளில் சிறந்து விளங்கிய போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சுவரொட்டி வரையும் போட்டி: முதல் பரிசு: சகானா; இரண்டாம் பரிசு: கீர்த்திகேஷ்; மூன்றாம் பரிசு: கனிஷ்கா. பாட்டு போட்டி: முதல் பரிசு: அண்ட்ரியான் ஜோசப்; இரண்டாம் பரிசு: ஜோஷ்னிகா; மூன்றாம் பரிசு: பூர்விகா. சவூதி கலாச்சார உடை அணியும் போட்டி: முதல் பரிசு: அதரவ்; இரண்டாம் பரிசு: யாஷிகா; மூன்றாம் பரிசு: பிரகதி. வெற்றியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழாவை சிறப்பித்த விழாக் குழுவினர் இந்த மாபெரும் நிகழ்ச்சி, அல் அசா தமிழ் சங்கத்தின் உறுப்பினர்கள் ஒருங்கிணைந்த சிறப்பான திட்டமிடலின் காரணமாக வெற்றிகரமாக நடைபெற்றது. விழா ஒருங்கிணைப்பாளர்கள்: Er. அசோக் பிரசன்னா - மஞ்சுளா Dr. சுரேஷ் - மான்விழி Er. ரமேஷ் ராஜ் - Dr. சூரிய பிரபா Er. அனீஷ் Dr. செந்தில்வடிவேல் - ஸ்ரீதேவி Er. ரமேஷ் - பவானி Er. சக்திவேல் - ஸ்ரீமதி Er. அமீன் -அமீரா
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக Dr. முகம்மது மைதீன் முஸ்தபா மற்றும் ஐயப்பன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். உணவினை சென்னை உணவகம் - Mubaraz சுவையான முறையில் வழங்கியது. விழாவின் முக்கிய நன்கொடையாளர்கள் Natchiyar Mind care-coimbatore, YAJ Import, Trading and Marketing-Dammam, ASRA innovations, Dessert and Delights. இந்நிகழ்ச்சி முடிவடைந்தபோதிலும், இசையின் இனிமை, நடனத்தின் தாளம், மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் பெருமை அனைவரது மனதிலும் ஓங்கியது. 'தமிழின் ஒளியினை எந்நாளும் பரப்புவோம்!' - இந்த விழா தமிழ் மொழி, கலாச்சாரம், இசை, மற்றும் ஒற்றுமையின் பேரெழுச்சியை அனைவரும்
- நமது செய்தியாளர் பொறியாளர் காஜா மைதீன்
Advertisement