sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

கத்தாரில் சர்வதேச சிலம்பப் போட்டி

/

கத்தாரில் சர்வதேச சிலம்பப் போட்டி

கத்தாரில் சர்வதேச சிலம்பப் போட்டி

கத்தாரில் சர்வதேச சிலம்பப் போட்டி


மே 06, 2025

Google News

மே 06, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கத்தார் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளின் அமைப்பான QTTS, ஆருத்ரா சிலம்பம் கத்தர் தற்காப்பு கலை மற்றும் இந்திய விளையாட்டு மையம் இணைந்து கத்தார் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் பிரத்யேக அனுமதியுடன் முதலாவது பன்னாட்டு சிலம்ப போட்டி கடந்த 'அல் அரபி' உள்விளையாட்டு அரங்கில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

கத்தாரில் மண்ணில் முதன் முறையாக, தமிழ்நாட்டை சார்ந்த மங்கல வாத்திய கலைஞர்களான வயலின் வித்வான் வி.ஜனார்த்தனன், நாதசுவரம் இசைக்கலைஞர் R.மணிகண்டன், தவில் வித்வான் கோவிந்தபுதூர் G. வினோத் ராஜ், தவில் வித்வான் V.S.ஹரிஹரன் வருகை தந்தது கூடுதல் சிறப்பை உண்டாக்கியது. அவர்கள் தங்களது மங்கல வாத்தியங்களை இசைத்து அரங்கத்தின் காலைப் பொழுதினை வேறொரு சூழலுக்கு கொண்டு செல்ல, கூடியிருந்த மக்களின் மனது பரவசப்பட்டு முகங்கள் மலரும் விதத்தில் வெகு ரம்மியமான மங்கல இசைப்பரவ விழா இனிதே ஆரம்பமானது.


கத்தார் சர்வதேச சிலம்ப போட்டியில் பங்கு பெற இந்தியா, இலங்கை, அமீரகம் மற்றும் கத்தாரை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ வீரர்கள் காலை ஏழு மணியிலிருந்து பதிவு செய்யத் தொடங்கினர். மாணவர்களை பாரம்பரிய முறைப்படி QTTS கலை மற்றும் கலாச்சார துறை தலைவர். வெங்கட் பிரபு, செயலாளர். தக்ஷிணாமூர்த்தி, நிதியுதவி செயலாளர் துரை வரவேற்று, அவர்களுக்கு பன்னாட்டு சிலம்ப போட்டிக்கான பிரத்யேக சீருடை வழங்கப்பட்டது. காலை முதலே தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பெற்றோர்கள் என திரளாக வந்த மக்கள் கூட்டம் அரங்கத்தை நிறைத்தது.


பன்னாட்டு சிலம்பப் போட்டிக்கு நடுவர்களாக இந்தியாவில் இருந்து வந்திருந்த மகாகுரு ஹரிதாஸ், மகாகுரு டேவிட், ஆசான்கள் ரத்ன ராஜ்குமார் சேகர், P. ஸ்ரீதர், K. பார்த்திபன், S அலமேலு, சூரியா ஆகியோரை கத்தார் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள் அமைப்பின் தலைவர் பழனிக்குமார், பொதுச் செயலாளர் சரவணன், விளையாட்டு துறை செயலாளர் வசந்தகுமார் பொன்னாடை போர்த்தி விழா அரங்கத்திற்குள் அழைத்துச் சென்றனர்.


அதனைத் தொடர்ந்து தமிழ்ப்பாரம்பரிய முறைப்படி விளக்கேற்றும் வைபவம் நடந்தது. கத்தாரில் இயங்கி வரும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த இந்திரா வரதராஜன், குரு, சீனிவாசன், பிரேம் கலா சரவணன், மணிமாலா இளமுருகன், ரேகா சரவணன், விஜயலட்சுமி பழனி குமார் ஆகியோர் குத்து விளக்கில் தீபம் ஏற்றி விழாவை பாரம்பரிய வழியில் பிரகாசமாக்கினர். தமிழகத்தைச் சேர்ந்த சிறப்பு ஆசான்கள் முதலில் சிலம்ப சலவரிசை செய்து போட்டி நடத்த ஆயத்தமானார்கள்.


கத்தார் மகிழ்வரங்கம் தலைவர் வரதராஜன், அக்குவா குளோபல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவன தலைவர் பிரதாப் ஸ்ரீதர் இருவரும் இணைந்து தொடுமுறை போட்டிக்கான சிலம்பம் எடுத்து சுழற்றி விளையாடி சிங்கமென சிலிர்த்து நிற்க, இச்சிலம்ப போட்டியின் தலைவர் ராமசெல்வம், பேராசான் சண்முக சிவ சிதம்பரம் குமாரசாமிக்கு சிலம்ப வணக்கம் செலுத்தி நடுவராக நடுநாயகமாக நின்று போட்டிக்கு பச்சைக் கொடி காட்டித் துவக்கினார்.


அதன் தொடர்ச்சியாக சிலம்பத் தனித்திறன் போட்டி, சிலம்ப தொடுமுறைப் போட்டி நடைபெற, போட்டியின் வெற்றியாளர்களுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.


இந்த சர்வதேச சிலம்பம் போட்டிகளின் விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக கத்தார் நாட்டுக்கான இந்தியத் தூதர் விபுல், நடிகர் சுமன், ஐ.எஸ்.சி. தலைவர் E.P. அப்துல் ரஹ்மான், இணை பொதுச் செயலாளர் கவிதா மகேந்திரன், ஐசிசி தலைவர் A.P.மணிகண்டன், ஐ.சி.பி.எஃப் தலைவர் ஷாநவாஸ் பாவா, ஐசிசி ஆலோசனைக் குழுத் தலைவர் பாபு ராஜன், மேலாண்மை க்குழு உறுப்பினர்கள் ரவீந்திர பிரசாத், வெங்கப்பா, முன்னாள் துணைத் தலைவர் சுப்பிரமணியன் ஹேக்கப்லு, முன்னாள் பொதுச் செயலாளர் மோகன் குமார், கத்தார் தமிழ் சங்க முன்னாள் தலைவர் துரைசாமி குப்பன், ராஜவிஜயன், ஒருங்கிணைந்த தமிழ் பேரவை அமைப்பின் தலைவர் வலியுல்லாஹ், தமிழ் இளைஞர்கள் விளையாட்டு அமைப்பின் தலைவர் சத்யராஜ், கத்தார் முத்தமிழ் மன்ற பிரதிநிதிகள் குருஸ்ரீ, சிவசங்கர், விஜய் ஆனந்த், கிருஷ்ணவேணி திருமூர்த்தி, வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கத் தலைவர் தாஹிர், சிங்க பெண்கள் அமைப்பின் தலைவர் சுகன்யா, தோஹா மெடிடேசன் ஸ்பேஸ் தலைவர் சூடாமணி, ஏனைய தமிழ் சார்ந்த அமைப்புகளின் தலைவர்கள், ஆந்திர கலாவேதிகா அமைப்பின் விக்ரம், கலாச்சார செயலாளர் ஸ்ரீ சுதா உட்பட பல தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள் மாலை நிகழ்வில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


QTTS தலைவர் பழனிக்குமார், தூதர் விபுலுக்கு பொன்னாடை அணிவித்து, மலர்ச்செண்டு தந்து மரியாதை செய்ய, பின்பு தூதர், நடிகர் சுமனுக்கு மரியாதை செய்ய, ஐ.எஸ்.சி. தலைவர் அப்துல் ரஹ்மானை QTTS பொது செயலாளர் சரவணனும் பிற மேலாண்மைக்குழு உறுப்பினர்களும் பெருமைப்படுத்தினர். விருந்தினர்கள் அனைவரையும் QTTS குழுவினர் பொன்னாடை மற்றும் பூச்செண்டு வழங்கி சிறப்பு செய்தனர்.


அதைத் தொடர்ந்து இந்திய தூதர் விபுல், நடிகர் சுமன் மற்றும் அனைத்து விருந்தினர்களும் சிலம்பக்கலை மேலும் அது சார்ந்த போட்டி ஆகியவற்றை வெகுவாகப் பாராட்டி சிறப்புரையாற்றினர்.


தூதர் தனது பிரதான வாழ்த்துரையில், 'கத்தார் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் ஆருத்ரா சிலம்பம் கத்தார் இணைந்து - கத்தாரில் முதன்முதலாக சர்வதேச சிலம்பம் போட்டியை மிக சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்தியமைக்கு எனது மனமார்ந்த நன்றியை QTTS அமைப்பிற்கு தெரிவித்து கொள்கிறேன். நமது மதிப்பிற்குரிய பாரதப் பிரதமர் இந்தியாவில் விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதில் உறுதியான ஆதரவாளராக இருக்கிறார். அவருடைய தலைமையில், ஃபிட் இந்தியா, சர்வதேச யோகா தினம், மற்றும் கேலோ இந்தியா போன்ற பல முக்கியமான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் ஒரு ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றன. குறிப்பாக, கேலோ இந்தியா திட்டம் வழியாக கபடி, கோ-கோ மற்றும் பிற பாரம்பரிய இந்திய விளையாட்டுகளை மறுசீரமைத்து, உலகளவில் பறைசாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற முதல் சர்வதேச கோ-கோ போட்டி இந்த பாரம்பரிய விளையாட்டுகளுக்கான அங்கீகாரத்தில் ஒரு முக்கிய கட்டமாக இருந்தது என்பது பாராட்டத்தக்கது.


கத்தாரில் நடைபெறும் இந்த சர்வதேச போட்டி விழாவில் இந்தியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணி வீரர்களின் அர்ப்பணிப்பையும், உறுதிப்பாடையும் நான் மனதார பாராட்டுகிறேன். மூன்று நாடுகளிலும் பணியாற்றிய அனுபவமிருப்பதால் தமிழ் சமூகத்தின் ஒற்றுமை, உறுதி, பண்பாட்டுப் பெருமை போற்றும் பாங்கினை நான் நன்கு அறிவேன். ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியமான இந்த விளையாட்டு சார்ந்த சர்வதேச சிலம்ப போட்டி நிகழ்வை சிறப்பாக நடத்திய QTTS குழுவினருக்கு என் அன்பின் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். உங்கள் வாழ்க்கையில், எதிர்காலத்தில் சிலம்பக்கலையில் பல்வேறு சாதனைகளை புரிய வாழ்த்துகிறேன்.' என்று கூறினார்.


தொடர்ந்து இந்த சிலம்ப போட்டியை மிக சிறப்பாக நடத்திய நடுவர்களுக்கு கேடயம் தந்து பாராட்டி மகிழ்ந்தனர் விழாக் குழுவினர். மேலும், பாரம்பரிய சிலம்ப குழுப் போட்டியில் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் வென்ற சிலம்பக் குழுவிற்கு பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி, பாராட்டி பெருமைப் படுத்தப்படுத்தினர்.


QTTS தகவல் தொடர்பியல் மற்றும் ஊடகத் தலைவர் மணிமாலா இளமுருகனின் நன்றியுரையோடு விழா நிறைவுற்றது.


முன்னதாக QTTS தலைவர் பழனிக்குமார் நினைவு பரிசை இந்திய தூதர் விபுலுக்கு வழங்கி கௌரவித்தார். அதேபோல நடிகர் சுமனின் 50 வது தற்காப்பு கலை ஆண்டை முன்னிட்டு அவருக்கு இந்திய தூதர் விபுல் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.


இந்த விளையாட்டு போட்டி விழாவுக்கு கத்தர் அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை அமைப்பின் பிரதிநிதிகளான ரஃபிக், மதன்குமார், பாலாஜி, ரஷித், பிரபு, பாண்டியன், கோபால கிருஷ்ணன் சத்தியராஜ் ஆகியோர் விழாவுக்கான வாழ்த்துச் செய்தி கடிதங்களை QTTS தலைவர் பழனிக்குமாரிடம் ஒப்படைத்தனர். அனைத்து வாழ்த்துக் கடிதங்களும் அரங்கில் எல்.இ.டி. திரையில் காட்சிப்படுத்தப்பட்டு, வாசிக்கப்பட்டதும் பார்வையாளர்கள் மகிழ்வோடு ஆரவாரம் செய்தனர்.


கத்தாரில் நடைபெற்ற இந்தப் பன்னாட்டு சிலம்ப போட்டிக்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் தங்கள் முழுமையான ஆதரவினை வழங்கினர். நசீம் அல் ரபீ மருத்துவமனை, அவசர உதவிக்காக செவிலியர்களை மருத்துவ உபகரணங்களுடன் நியமித்து, போட்டிக்கு மருத்துவ உறுதுணையைக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. SSS பாதுகாப்பு நிறுவனம், பல்வேறு பாதுகாவலர்களை நியமித்து, போட்டி முழுவதும் சிறந்த பாதுகாப்பை வழங்கியதுடன், போட்டியின் ஒழுங்குமுறைக்குத் மிகவும் துணை நின்றது.


QTTS அமைப்பின் விளையாட்டுத் துறையின் தலைவர் சீனிவாசன், QTTS மேலாண்மை குழு உறுப்பினர்களுடன் ஒருங்கிணைந்து, அவர்களின் உறுதியான ஆதரவும், ஒத்துழைப்பும் மூலம் இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்தினார்.


மேலும், இப்போட்டியினை R.J. மிராண்டா மற்றும் R.J. சுதாகர் இருவரும் இணைந்து தொகுப்பாளர்களாக பணியாற்றி, விழாவின் நிகழ்வுகளை மிகுந்த திறமையுடனும், நெகிழ்ச்சியூட்டும் முறையிலும் சிறப்பாக வழங்கினர்.


லா மீடியா நிறுவனம் கத்தாரில் முதன் முறையாக இந்த நிகழ்வை 12 மணி நேர நேரலை ஒளிபரப்பாக வழங்கியது, இதனை 2000-க்கும் மேற்பட்டோர் நேரலையில் பார்த்து ரசித்தனர். மேலும், Q தமிழ் மற்றும் ஸ்கை தமிழ் ஊடகங்கள் அவர்களது உறுதுணையையும் பங்களிப்பையும் தந்தனர்.


இந்த கத்தார் முதலாவது சர்வதேச சிலம்ப போட்டி, பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட போட்டியின் தலைவர் ராமசெல்வத்தின் தலைமையில் மிகப் பிரமாண்டமான முறையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த போட்டி அதன் சிறந்த ஒழுங்கமைப்புக்காக பலரின் பாராட்டை பெற்றது.


இது போன்ற சர்வதேச போட்டி, குறிப்பாக சிலம்பக் கலை சார்ந்த போட்டியினை, கத்தாரில் நேர்த்தியான ஒருங்கிணைப்பு வாயிலாக வெற்றிகரமாக நடத்திய QTTS மேலாண்மைக் குழுவினரையும், ஆருத்ரா சிலம்பம் மற்றும் தற்காப்பு கலை & விளையாட்டு அமைப்பையும் கத்தார் வாழ் தமிழர்களும், அனைத்து அமைப்புகளும் வெகுவாகப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.


- நமது செய்தியாளர் எஸ். சிவசங்கர்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us